ETV Bharat / state

முதியவர்களுக்கு உதவும் கட்டுப்பாட்டு அறை! - chennai command center news

சென்னை: ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில், காவல்துறை சார்பில் புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

Command center
கட்டுப்பாட்டு அறை
author img

By

Published : May 15, 2021, 10:03 AM IST

சென்னையில் கரோனா பரவல் வேகம் அதிகளவில் உள்ளது. முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தும், பொதுமக்களின் நடமாட்டத்தை பல இடங்களில் காண முடிகிறது. மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபடடுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு உதவ, புதிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலக காலனி ஆய்வாளர் சரோஜினி தலைமையிலான மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 044- 23452221 என்ற எண்ணை முதியவர்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி போடுவதற்கும், உணவு ,மருந்து, உடை ஆகியவற்றை வாங்கிக் கொடுப்பதற்கும், கரோனாவால் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிப்பதற்கும் இந்தக் காவல் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் காவல் துறையினர் நேரடியாக உதவி செய்கின்றனர்.

கண்காணிப்பு பணி மட்டுமல்லாது, கரோனா காலத்தில் சேவைகள் செய்யும் சென்னை காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் அதிகாரங்கள் ஆணையருக்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.