சென்னை: குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் அட்டை பெற மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெறும் ஒரு நாள் குறைதீர் முகாமை மக்கள் முழுமையாக பயன்படுத்திகொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை தொடர்பான புகார்கள் குறைகளை தீர்க்க தமிழக அரசு ஒவ்வொரு வட்டத்தில் குறைதீர் முகாம்கள் நடத்தபடுமென அறிவித்திருந்தது.
அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள மக்கள் வரும் 10ம் தேதி மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாமை மக்கள் பயன்படுத்தி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு செய்தல், செல்போன் எண் மாற்றம் செய்தல், மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கேட்கும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் இருந்தால் அவற்றை பொதுமக்கள் நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
மேலும் இது தொடர்பான புகார்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை வந்த விமானத்தில் சஹாரா நரிகள் கடத்தல்.. குருவி கூறிய பலே காரணம்?