சென்னை: பதிவுத்துறை தொடர்பான புகார்களை இனி வாட்ஸ் ஆப் மூலமாக தெரிவிக்கலாம். வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் அறிவிப்புக்கு இணங்க பதிவுத்துறையில் பொதுமக்களிடம் இருந்து புகார்களை உடனுக்குடன் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கட்டுப்பாட்டு அறை இன்று (ஜூன் 16) முதல் பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு அறையில் மக்களிடம் இருந்து தொலைபேசி வாயிலாக புகார்களை பெற ஏதுவாக 9498452110, 9498452120, 9498452130 ஆகிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆப் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். மேலும், igrregpepitioncell_2021@tnreginet.net என்ற மின்னஞ்சல் முகவரி மூலவும் பொது மக்கள் தங்கள்து புகார்களை அனுப்பி வைக்கலாம்.
பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்தி தங்களது பதிவுத்துறை தொடர்பான கோரிக்கைளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு!