ETV Bharat / state

போக்குவரத்துக் காவலர்கள் சிறப்பு நடவடிக்கை: 3000ற்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்குப்பதிவு - போக்குவரத்து காவலர்கள் சிறப்பு நடவடிக்கை

சென்னையில், சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகப் போக்குவரத்து காவலர்களால் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து காவலர்கள் சிறப்பு நடவடிக்கை: 3000ற்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு

author img

By

Published : Mar 22, 2022, 3:36 PM IST

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறையினர், விபத்துகளைக் குறைப்பதற்கும், சீரானப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மேலும், சென்னையில் விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வதுடன் சிசிடிவி கேமராக்களின் துணையுடனும் நேரடி தொடர்பில்லாத முறையிலும் (Contact less enforcement) வழக்குகளை பதிவு செய்கின்றனர்.

சமீபகாலமாக, பெரும்பாலான வாகனங்களில், குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் பதிவு எண் (Registration Number Plates) மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக உள்ளது (Defective Number Plates). இந்த தவறானப் பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும்போதும் விபத்துகள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் பொழுதும், அவற்றின் பதிவு எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

வாகனங்கள் மேல் வழக்குப் பதிவு

மேலும், சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டுச்செல்வது அதிகமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. எனவே தவறானப் பதிவு எண்கள் கொண்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்,

சாலையோரங்களில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதைக் கட்டுப்படுத்தவும், சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களில் சிறப்பு நடவடிக்கையாக 73 இடங்களில் சிறப்பு சோதனை மேற்கொண்டு அதிக அளவிலான வழக்குகள் பதிவு செய்தும், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை கைப்பற்றியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்தச் சிறப்பு நடவடிக்கையில் 2306 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 826 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க:'பீஸ்ட்' திரைப்படம் - ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.