ETV Bharat / state

என்ன வேண்டும் இந்த பட்ஜெட்டில் ?

வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்னும் இரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், நாட்டின் பொருளாதார ஆலோசகராக வி. அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சரி, சாமான்யர் முதல் சாதனை மனிதர்கள் வரை என்ன வேண்டும் இந்த பட்ஜெட்டில் என சிறிய ஒற்றைவரியை மட்டுமே கேள்வியாக வைத்தோம், கொட்டித் தீர்த்தார்கள். அவை உங்களின் பார்வைக்கு...

ந்
ந்
author img

By

Published : Jan 30, 2022, 3:33 PM IST

Updated : Jan 30, 2022, 4:39 PM IST

சென்னையைச் சேர்ந்த பொருளாதார விமர்சகர் வ.நாகப்பன் கூறுகையில், 'வருவாயை அதிகரித்து செலவுகளை கட்டுக்குள் கொண்டுவந்து நிதிப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் அதுதான் தற்போது மிக முக்கியமானது.

ச்
நாகப்பன்

பங்குச்சந்தையைப் பொறுத்தவரையில் STT-யை நீக்கிவிட்டு லாங் டேர்ம், சார்ட் டேர்ம் லாபத்துக்கு வரிவிதிக்கலாம், லாபம் பார்ப்பவர்கள் வரி கட்டித்தான் ஆக வேண்டும்' என்றார்.

இது குறித்து திருச்சி உணவக உரிமையாளர் ராஜா நசீர் கூறுகையில், 'வாங்கும் மளிகைப் பொருள்களுக்கு GST கட்டுகிறோம்.

எ
ராஜா நஸீர்

சமையல் எரிபொருள் உருளை வாங்கும் பொழுது அதற்கும் GST கட்டுகிறோம். சமைத்த உணவிற்கும் GST கட்டுகிறோம். இதன்பிறகும் ஆன்லைனில் டெலிவரிக்கும் GST போடுவது சரியல்ல. எனவே, நிதியமைச்சர் ஆன்லைன் உணவக சேவைக்கு GST-யிலிருந்து விலக்கு கொடுத்தால் கரோனாவால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உணவகத் தொழில் நசியாமல் பாதுகாக்கலாம்’ என்றார்.

'தி இந்தியன் பயர் ஒர்க்ஸ் அசோசியேசனின்' முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'சிவகாசி TIFMA மொத்தத்தில் சிவகாசியின் வாழ்வாதாரம் பட்டாசு தொழிலை நம்பித்தான் இருக்கிறது.

s
ராதாகிருஷ்ணன்

24 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக மத்திய அரசு வரியைக் குறைத்து கொடுத்தது மகிழ்ச்சியே. நாங்கள் செய்யும் தொழில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பசுமைத்தீர்ப்பாயத்தின்கீழ் உள்ளது. இந்நிலையில் அவை விதித்த பசுமைப்பட்டாசு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

அவற்றைக்கருத்தில்கொண்டு ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும் இல்லையேல், விருதுநகர் மாவட்டமே பஞ்சம்பிழைக்க வேண்டியதாகிவிடும்’ என்றார்.

இதுகுறித்து திருச்சியைச்சேர்ந்த குடும்பத்தலைவி விமலா குணசேகரன் கூறுகையில், 'எங்களுக்கு என்னங்க பெரிய தேவை இருக்கு. முக்கியமா சிலிண்டர் விலையைக் குறைக்கணும். விலைவாசி உயர்வு கண்ணைக்கட்டுது.

எ
விமலா குணசேகரன்

அதை கட்டுக்குள்ள கொண்டுவர வழி செய்யணும். எங்க வீட்டுக்காரர் கிட்ட எதைக்கேட்டாலும் எப்ப கேட்டாலும் பெட்ரோல் என்ன விலை விக்குது தெரியுமானு கேள்வி கேட்குறாரு. மத்திய அரசோ, மாநில அரசோ மொதல்ல இந்த விலையக் கட்டுக்குள்ள வைக்கணும். அவ்வளவுதாங்க’ என்றார்.

திருச்சியைச்சேர்ந்த கட்டுமானப்பொறியாளர் ஆர்.எஸ்.ரவி. கூறுகையில், 'இந்த மத்திய அரசு பட்ஜெட்டில் புதியதாக வீடு வாங்குவோருக்கான வீட்டுக்கடன் மானியத் திட்டமான PMAY திட்டத்தை கால நீட்டிப்பு செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

s
ஆர்.எஸ். ரவி

இரண்டாம் மற்றும் மூன்றாம் நகரங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிக்கென பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டால் கட்டுமானத் தொழில் உத்வேகம் பெறும்.

கட்டட ஒப்பந்தங்களுக்கான GST வரியைக் கணிசமான அளவு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். மிகமிக அதிகமாக உயர்ந்துள்ள சிமென்ட், கம்பி போன்ற கட்டட சாமான்கள் விலையையும், பத்திரப் பதிவுக்கட்டணம் ஆகியவற்றையும் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இதனால் ரியல்எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறை எழுச்சி பெறும். அதனை சார்ந்த பல்வேறு தொழில்களும் தொழிலாளர்களும் வளம் பெறுவார்கள். எனவே, இதனை அரசாங்கம் பட்ஜெட்டில் கண்டிப்பாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

பட்ஜெட் குறித்து திருச்சியைச் சேர்ந்த பாஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தில் தலைமை அலுவலர் அந்தோணி ப அடைக்கலம், 'இ.எஸ்.ஐ. (ESI) மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (EPF) ஒருங்கிணைந்த நலத்திட்டமாக மாற்றலாம்.

ச்
அந்தோணி ப அடைக்கலம்

மேலும் தனியார் துறை Insurance நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து, இத்திட்டத்தின் மூலம் பல நிறுவனங்கள் பயனடையும் விதமாகவும் மாற்றலாம்.

இ.எஸ்.ஐ-ல் பயனீட்டில் தனியார்துறை மருத்துவ செலவுகளை ஏற்கும் மாற்றம் கொண்டு வரலாம். விவசாயம் மற்றும் தொழில் முனைவோர் பாடத்திட்டத்தை ஒரு பாடமாக கற்கும் வசதியினை அனைத்து வித கல்லூரிகளிலும் ஏற்படுத்த முனைய வேண்டும்.

அனைத்து சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கும், முதல் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு அவர்கள் செய்யும் முதலீட்டுக்கான வரிச்சலுகை அளித்து தொழில் முனைவோரை ஊக்குவிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த தொழிலாளர் நலச்சட்டங்கள் இன்றைய நாளில் அத்தியாயத்தேவைகளில் ஒன்று. ஒன்றிய மற்றும் மாநில GST அலுவலகத்தை ஒருங்கிணைத்து ஒரே அதிகார மையமாக மாற்றம் கொண்டு வரவேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை: 36ஆவது கட்ட அமர்வுடன் நிறைவுபெற வாய்ப்பு

Last Updated : Jan 30, 2022, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.