ETV Bharat / state

மறைந்த முதலமைச்சர்கள் பெயரை குறிப்பிடுவது எப்படி? பேரவையில் தனபால் அறிவுரை!

சென்னை: மறைந்த முதலமைச்சர்களின் பெயரை குறிப்பிடும்போது மரியாதையோடு குறிப்பிடுமாறு பேரவை உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் தனபால் அறிவுரை வழங்கியுள்ளார்.

danapal
author img

By

Published : Jul 9, 2019, 12:55 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘மறைந்த முதலமைச்சர் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் அடிக்கடி சொல்கிறார், இது தவறு, இதை சபாநாயகர் தடுக்க வேண்டும், இல்லையெனில், நாங்களும் அவர்களின் தலைவர் பெயரைச் சொல்லி பேசுவோம்’ என கூறினார்.

அப்போது குறிப்பிட்ட ஸ்டாலின், ‘நான் பெரும்பாலும், மறைந்த அம்மையார் பெயரை குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். தவிர்க்க முடியாத சில தருணங்களில் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறேன். அதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்களும், கலைஞர் பெயரை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவையில் அது பதிவும் ஆகியிருக்கிறது. இதை ஒரு குற்றச்சாட்டாக அமைச்சர் கூறுவது சரியல்ல’ என்றார்.

இதையடுத்து பேசிய சபாநாயகர் தனபால், ‘மறைந்த தலைவர்கள், முதலமைச்சர்கள் பெயரைக் குறிப்பிடுவது சரியாக இருக்காது. யாருடைய பெயரையுமே குறிப்பிட வேண்டாம். அவ்வாறு குறிப்பிடும் போது மரியாதையுடன் குறிப்பிட வேண்டும்’ என உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

Intro:
மறைந்த முதலமைச்சர் பெயர்கள் குறிப்பிடுவது எப்படி?
சபாநாயகர் தனபால் பேரவை உறுப்பினருக்கு அறிவுரை

Body:தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ,
மறைந்த முதல்வர் பெயரை அடிக்கடி எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார், இது தவறு, இதை சபாநாயகர் நிறுத்த வேண்டும் , இல்லை எனில், நாங்களும் அவர்களின் தலைவர் பெயரை சொல்லி பேசுவோம் என கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய மு.க.ஸ்டாலின், நான் பெரும்பாலும், மறைந்த அம்மையார் பெயரை குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். தவிர்க்க முடியாத சில தருணங்களி்ல் பெயரை குறிப்பிட்டிருக்கிறேன். அதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்களும், கலைஞர் பெயரை குறிப்பிட்டிருக்கிறீர்கள். .அவையில் அது பதிவும் ஆகியிருக்கிறது. இதை ஒரு குற்றச்சாட்டாக அமைச்சர் கூறுவது சரியல்ல என கூறினார்.

அப்போது பேசிய சபாநாயகர் தனபால், மறைந்த தலைவர்கள் பெயரை குறிப்பிடுவது சரியாக இருக்காது. யாருடைய பெயரையுமே குறிப்பிட வேண்டாம். அவ்வாறு குறிப்பிடும் போது மரியாதையுடன் குறிப்பிட வேண்டும் என உறுப்பினர்களுக்கு தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.