பிரபலப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் செய்தி தென்னிந்தியத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து வந்த நாள்களில் அவர் கரோனா தொற்றிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பாலசுப்ரமணியம் சுயநினைவுடன் உள்ளார் என்றும், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "பல்நோக்கு மருத்துவக் குழு அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
![எஸ்பிபி மருத்துவ அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2020-08-28-at-183132_2808newsroom_1598619742_816.jpeg)
இதையும் படிங்க: நுழைவு தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி கைகோர்க்கும் ஆறு மாநில அமைச்சர்கள்