சென்னை: தமிழ்நாடு முன்னாள் அமைச்சா் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஊழல் வழக்குப்பதிவு செய்து நேற்று (ஆக.10) அவர் தொடர்புடைய 60 இடங்களில் சோதனை நடத்தினர்.
சென்னையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் தங்கியிருந்த வேலுமணியிடமும் விசாரணை நடத்தினர். சோதனை நிறைவு பெற்ற பிறகு நேற்று இரவு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசினாா்.
தூத்துக்குடி பயணம்
இதையடுத்து வேலுமணி இன்று கோவை செல்வாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவா் இன்று காலை 6 மணியளவில் விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். அங்கு கோயிலில் சாமி தரிசனம் செய்ததாக அவர் தெரிவித்தார்.
அதன் பின் சென்னை திரும்பிய அவரைக் காண 50-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது ஆதரவாளர்கள் கோவிந்தா..கோவிந்தா.., ஜெய் வேலுமணி என கோஷம் எழுப்பினர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் எஸ்.பி.வேலுமணி - சிறப்பு தரிசனமா...ரகசிய சந்திப்பா?