சென்னை: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே 'வந்தே பாரத் விரைவு ரயில்' நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. இதற்காக தென் மாவட்டங்களில் உள்ள ரயில் இரும்பு பாதையின் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை (ICF) சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் 'ரயில்-18' என்ற அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டன. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரயிலுக்கு, 'வந்தே பாரத் விரைவு ரயில்' என்று பெயரிடப்பட்டன.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 'வந்தே பாரத் விரைவு ரயில்' சேவை பயன்பாட்டில் உள்ளது. இதுவரை 31 'வந்தே பாரத் விரைவு ரயில்' தயாரிக்கபட்டுள்ளது. நாட்டின் முதல் 'வந்தே பாரத் விரைவு ரயில்' சேவை டெல்லி - வாரணாசி இடையே கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த ரயிலில் 8 முதல் 16 பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். முழுவதுமாக சீல் செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் இடையே இணைப்புகள் இருக்கும், இந்த ரயிலில் சி.சி.டி.வி, நவீன கழிப்பறைகள், மேம்படுத்த நாற்காலிகள் என முழுக்க முழுக்க சொகுசு ரயிலாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் - மதுரை கோட்ட மேலாளர் தகவல்
தற்போது வரை 26 'வந்தே பாரத் விரைவு ரயில்கள்' 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்கி வருகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் 75 'வந்தே பாரத் விரைவு ரயில்களை' இயக்க வேண்டும் என்பதே இந்திய ரயில்வே துறை இலக்காக வைத்துள்ளன.
இந்தியாவில் வேறு எந்த எந்த வழித்தடங்களில் 'வந்தே பாரத் விரைவு ரயில்' இயக்கப்பட முடியும் என்ற ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து சென்னை-மைசூரு, சென்னை-கோவை இடையே இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே 'வந்தே பாரத் விரைவு ரயில்' இயக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, "சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கூடுர் ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் 120-130 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளன. இதேப்போல் தென் மாவட்டங்களில் ரயில் இரும்புப்பாதைகளை மேம்படுத்த பணிகளானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முலம் 110.கி.மீ வேகத்தில் 130-கி.மீ வேகத்தில் செல்வதற்கு ஏற்றார் போல் பாதைகள் அமைக்கபட்டு வருகிறது. குறிப்பிட்ட வழித் தடத்தில் வேகத்தை அதிகரிக்க பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளானது முடிந்தால், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவை நவம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 47 கட்சித் தலைவர்களுக்கு கவிதா கடிதம்!