சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக உருவானது. இதனால் சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டது. அந்த வரிசையில் முதலில் சென்னையே அதிகமாக பாதிக்கப்பட்டது எனலாம்.
சென்னை மொத்தமும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தது. இதனால் சென்னைவாசிகளின் அன்றாட இயல்பு வாழ்க்கை அதிகளவில் பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மொத்தமும் வெள்ள நீரில் மூழ்கியதால் சென்னைக்குச் செல்லும் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறைந்து, படிப்படியாக வெள்ள நீரானது வடிந்து வருகிறது. சில முக்கிய சாலைகளில் இடங்களில் நீர் முற்றிலுமாக வடிந்துவிட்டது. ஆனால், தற்போது வரை சில இடங்களில் வெள்ள நீர் வடியாமலும், அதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும் சென்னை மக்கள் தவித்து வருகின்றனர்.
-
Southern Railway cancels 15 train services for today. pic.twitter.com/eiTQyvQwcO
— ANI (@ANI) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Southern Railway cancels 15 train services for today. pic.twitter.com/eiTQyvQwcO
— ANI (@ANI) December 6, 2023Southern Railway cancels 15 train services for today. pic.twitter.com/eiTQyvQwcO
— ANI (@ANI) December 6, 2023
அதனை சரி செய்யும் மீட்புப் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வெள்ள பாதிப்பு குறைந்த நிலையில், படிப்படியாக பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. விமான சேவையும் துவங்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை சென்ட்ரலில் இன்னும் சீரமைப்புப் பணி நிறைவடையாததால், சென்னை செல்லும் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை - நெல்லை வந்தே பாரத் உள்பட 15 ரயில் சேவைகள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று (டிச.7) ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:
- சென்னை சென்ட்ரல் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி அந்தமான் எக்ஸ்பிரஸ் - Train No.16031 (Dr MGR Central - Shri Mata Vaishno Devi Andaman Express)
- சென்னை சென்ட்ரல் விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - Train No.20677 (Dr MGR Central Vijayawada Vande Bharat Express)
- சென்ட்ரல் மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - Train No.20607 (Dr MGR Central - Mysuru Vande Bharat Express)
- சென்னை சென்ட்ரல் மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் - Train No.12007 (Dr MGR Central - Mysuru Shatabdi Express)
- சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் - Train No.12675 (Dr MGR Central - Coimbatore Kovai Express)
- சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் - Train No.12639 (Dr MGR Central - KSR Bengaluru Brindavan Express)
- சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் - Train No.16057 (Dr MGR Central Tirupati Express)
- திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் - Train No.16058 (Tirupati - Dr MGR Central Express)
- சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் - Train No.16053 (Dr MGR Central - Tirupati Express)
- திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் - Train No.16054 (Tirupati - Dr MGR Central Express)
- சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் - Train No.12243 (Dr MGR Central Coimbatore Shatabdi Express)
- சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் - Train No.12077 (Dr MGR Central Vijayawada Jan Shatabdi Express)
- சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் - Train No.22625 (Dr MGR Central KSR Bengaluru Double Decker Express)
- சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு ரயில் - Train No.06067 (Chennai Egmore Tirunelveli Vande Bharat Special)
- திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் - Train No.06068 (Tirunelveli - Chennai Egmore Vande Bharat Special) ஆகிய 15 ரயில் சேவைகளின் சேவை இன்று (டிச.7, வியாழக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- இதைத் தவிர்த்து, திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலும் ரத்து - Train No.06674 (Tiruchendur - Tirunelveli Express Special)