சென்னை: இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தெற்கு ரயில்வேயின் வணிக துணை மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், 'சீரடி ஸ்ரீசாய்பாபாவின் மகா சமாதி தினத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் 12ஆம் தேதி, மதுரையில் இருந்து சீரடிக்கு உலா ரயில் புறப்படும்.
அதேபோல தீபாவளியை முன்னிட்டு சிறப்பு உலா ரயில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி மதுரையில் இருந்து காசிக்கு புறப்படும். தீபாவளி அன்று காசியில் புனித நீராடி, தங்க அன்னபூரணி சிறப்பு லட்டு தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ளலாம்.
சுவையான தென்னிந்திய சைவ உணவுகளை சமைக்க புதிய தொழில்நுட்பம், தங்குமிடம், சுற்றிப்பார்த்தல், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்' என அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு www.ularail.com எனும் இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் எனவும் மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் கூறினார்.
இதையும் படிங்க:கை கொடுக்குமா ராகுல் காந்தியின் யாத்திரை? சிறப்பு தொகுப்பு