சென்னை: பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால் சிறப்பு ரயில், பேருந்துகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதிலும் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்டுத் தீர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
Chennai Egmore - Tirunelveli - Chennai Egmore Vande Bharat #Diwalispecial
— Southern Railway (@GMSRailway) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Vande Bharat between Chennai Egmore and Tirunelveli to run on all 7 days during this week ahead of Diwali, Kindly take note & plan your travel#SouthernRailway #Deepavali2023 pic.twitter.com/C9zVgMnpQ4
">Chennai Egmore - Tirunelveli - Chennai Egmore Vande Bharat #Diwalispecial
— Southern Railway (@GMSRailway) November 7, 2023
Vande Bharat between Chennai Egmore and Tirunelveli to run on all 7 days during this week ahead of Diwali, Kindly take note & plan your travel#SouthernRailway #Deepavali2023 pic.twitter.com/C9zVgMnpQ4Chennai Egmore - Tirunelveli - Chennai Egmore Vande Bharat #Diwalispecial
— Southern Railway (@GMSRailway) November 7, 2023
Vande Bharat between Chennai Egmore and Tirunelveli to run on all 7 days during this week ahead of Diwali, Kindly take note & plan your travel#SouthernRailway #Deepavali2023 pic.twitter.com/C9zVgMnpQ4
இந்நிலையில், தமிழகத்திற்குள் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையிலும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எக்மோர் - திருநெல்வேலி - சென்னை எக்மோர் இடையே வியாழக் கிழமை தவிர்த்து வாரத்தின் 7 நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு வாரத்தின் 7 நாட்களுக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே அதன் X சமூக வலைத்தள பக்கத்தில், “தீபாவளி பண்டிகையின் போது கூடுதல் நெரிசலைக் கருத்தில் கொண்டு சென்னை எழும்பூர் - திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் வியாழக்கிழமை (அதாவது சேவை அல்லாத நாளிலும்) இயக்கப்படும்.
வந்தே பாரத் சிறப்பு ரயில்கள்: சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் எண் 06067 கொண்ட சிறப்பு ரயில் நவம்பர் 09 அன்று (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து காலை 06.00 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் 14.15 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
மறுதிசையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கிச் செல்லும் ரயில் எண் 06068 கொண்ட வந்தே பாரத் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 09, (வியாழன்) அன்று 15.00 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் 23.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயிலில் 1- எக்ஸிகியூட்டிவ் இருக்கை பெட்டி மற்றும் 7 சாதாரண இருக்கை பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். மேலும், இந்த சிறப்பு ரயில் சேவைக்கான முன்பதிவு விரைவில் துவங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.