பொங்கல் பண்டிகையின்போது ஏராளமானோர் குடும்பத்துடன் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதனால் பேருந்துகள், ரயில்களில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படும்.
இதற்காக ஆண்டுதோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 15 முதல் 17ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், அதற்கான சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி, தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், நாகர்கோவிலிருந்து திருச்சி வரையிலும்.
திருச்சியிலிருந்து எழும்பூர், திருநெல்வேலியிலிருந்து தாம்பரம், நாகர்கோவிலிருந்து தாம்பரம் ஆகிய மார்கங்களில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சுவிதா ரயில்களும், சிறப்பு கட்டண ரயில்களும் இயக்கப்படும். இதற்கான முன் பதிவு இன்று (8.1.2020) முதல் தொடங்குகிறது.
இதையும் படிங்க: