ராணுவ தெற்கு மண்டலத் தளபதி சிபி மோகன்டி, இருநாள் அரசு முறைப் பயணமாக நேற்று (நவ.30) சென்னை வந்தார். இதனைத்தொடர்ந்து, இன்று (டிச.01) ஆவடியில் உள்ள ராணுவ மையங்களைப் பார்வையிட்டார்.
ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலை, ராணுவத் தொழிற்சாலை ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, தெற்கு மாவட்டங்களில் உள்ள ராணுவக் குழுக்களின் தயார் நிலை, பொருள்கள் கொண்டு செல்லும் வசதிகள், மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண உதவிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, ராணுவத்தில் பல்வேறு பதவிகளில் உள்ள அலுவலர்கள், வீரர்களின் சேவைகளைப் பாராட்டிய அவர், ஈடுபாட்டுடனும், உத்வேகத்துடனும் தங்களுக்கு வழங்கும் அனைத்துப் பணிகளையும் ராணுவ வீரர்கள் திறம்பட நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.