சென்னை: தலைமை செயலகத்தில் வரும் 19-ம் தேதி மாலை 5:00 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவையில் புதிதாக கடந்த 14-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றார். மேலும், பல அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்து அறிவிப்புகள் வெளியாகின. இந்த நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட உள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கடந்த முறை சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்தும், இலாகாகள் மாற்றம் தொடர்பாகவும், நிலுவையில் உள்ள மசோதாக்கள், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்டப்பேரவை தீர்மானங்கள் மற்றும் வரக்கூடிய வருகிற 2023-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் பொங்கல் விழாவிற்கு முன்னதாக வைக்கலாமா? (அ) பிறகு வைக்கலாமா? அதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியிடலாம் என்பன குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளன.
இதையும் படிங்க: சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஆலோசனை!