ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மார்ச் 9-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 27, 2023, 5:27 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் மார்ச் மாத இறுதிக்குள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். தமிழ்நாடு அரசு இதற்கான பணியை தொடங்கி இருந்தபோதிலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக இந்த பணிகள் சற்று தாமதம் ஏற்பட்டது. அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், அவ்வப்போது தொலைபேசி மூலமாக துறை சார்ந்த உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக அறிவுரைகளை வழங்கி வந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான பிரச்சாரம் ஓய்ந்து, தேர்தல் இன்று நடைபெற்றது. மேலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலுக்கான பணியை தமிழ்நாடு அரசு தொடங்கி பணிகள் மேற்கொண்டு வருகிறது.

மேலும் மார்ச் இரண்டாம் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில் அதற்கான ஒப்புதலை பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில்
நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல், டைடல் பூங்கா, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படவுள்ளது.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகையான 1000 ரூபாய் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதற்கான ஒப்புதலும் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தினை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் மூன்றாம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸூக்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு: ஆர்டிஐ தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.