ETV Bharat / state

"ஓட்டுக்கு ரூ.15,000 திட்டம்" ஈரோடு இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பு? - DMK erode east by election campaign strategy

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களார்களுக்கு குக்கர், கொலுசு போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஈரோடு இடைத்தேர்தலில் இடைமறிக்கும் பரிசு பொருட்கள்.. தேர்தல் ரத்து செய்யப்படுமா.?

author img

By

Published : Feb 21, 2023, 11:24 AM IST

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் நான்கு முனை போட்டி ஏற்பட்டாலும், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கும், அதிமுகவுக்கும்தான் கடுமையான போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில், ஆளும் திமுகவிற்கு 21 மாத ஆட்சியின் மதிப்பீடாகவும், அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமையை நிரூபிக்கும் பொருட்டாகவும் கருதப்படுகிறது.

இதனையொட்டி ஆளும் கட்சியான திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காகப் பல முறைகேடு செயல்களில் ஈடுபடுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இடைத்தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திலும், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், சரியான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு கொடுத்திருந்தனர்.

இதில், தேர்தலுக்கான பணிகள் முறையாக நடைபெறுவதாகத் தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து சிவி சண்முகம் தொடுத்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. அதேநேரம் ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை வரலாறு காணாத பணம் செலவு செய்யப்படுவதாகச் சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த இடைத்தேர்தலில் பல முயற்சிகளை ஆளும் திமுக எடுத்துள்ளதாக, அதிமுக மற்றும் அதனுடைய கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகரில் வேட்பாளராகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் தரப்பினர் வாக்குக்கு 4,000 ரூபாய் வழங்குகின்றனர் என்ற தகவலின் அடிப்படையில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில், ஒரு நாளைக்கு ஒரு வாக்குக்கு 2,000 ரூபாய் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் குக்கர் மற்றும் கொலுசு போன்ற குடும்பத் தலைவிகளைக் கவரும் பரிசுப் பொருட்கள் வழங்குவதாக இருக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அது மட்டுமில்லாமல், வாக்காளர்கள் அடைத்து வைக்கப்பட்டு காலையில் 500 ரூபாயும், மாலையில் 500 ரூபாய் உடன் கறி விருந்து, புதிய படங்கள் திரையிடல் போன்றவற்றில் திமுகவினர் ஈடுபடுவதாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கனவே திமுகவினர் இடைத்தேர்தலில் முறைகேட்டில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக பாஜகவினர் ஆதாரத்துடன் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளனர்.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அனுமதியின்றி 14 பணிமனைகள் செயல்படுவதாகத் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க கோரி கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து நேற்று (பிப்.20) ஈரோடு இடைத்தேர்தல் களத்தின் குற்றச்சாட்டுத் தொடர்பாக விளக்கமளித்த மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை கணக்கில் வராத 61.70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதேபோல் சி.விஜில் என்ற மொபைல் செயலியில் இதுவரை ஒரு புகார் மட்டுமே வந்துள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் பணப்பட்டுவாடா தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். மேலும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்தாலும், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை எனவும் சத்யபிரதா சாகு விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திமுகவினர் புதிய பார்முலாவை பயன்படுத்துவதாகக் கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், வாக்காளர்களை இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்வது எந்த தேர்தலிலும் நடக்காத ஒன்று என்றும், இதனால் எதிர்க்கட்சியான அதிமுக வாக்கு சேகரிக்கச் செல்லும்போது வாக்காளர்கள் வீட்டில் இருப்பதில்லை" எனவும் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

அதேநேரம் ஒரு வாக்காளருக்கு, நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் செலவு செய்கின்றனர் என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு வாக்காளருக்கு 15,000 ரூபாய் கொடுப்பதற்கு திமுக திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் மக்களை ஆடு, மாடு போன்று அடைத்து வைத்து பணம் விநியோகம் போன்ற செயல் நடந்து கொண்டிருப்பதாகவும், தோராயமாக சுமார் 200 கோடி ரூபாய் வரை இந்த தேர்தலுக்கு திமுக செலவு செய்ய இருப்பதாகவும் கூறினார்.

எனவே இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்பதால், தேர்தல் ஆணையம் இதனைக் கருத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இப்படியான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோக்கள், பணப்பட்டுவாடா போன்ற பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த தேர்தல் நடந்தால், அது 2009ஆம் ஆண்டு நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தலில் உருவான பார்முலாவை முறியடித்து, ஈரோடு கிழக்கு என்ற புதிய பார்முலா உருவாக்கும் எனவும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Viral video: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வீடு வீடாக குக்கர் தரும் காங்கிரசார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.