ETV Bharat / state

அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக அமித் ஷா கருத்து.. பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகலா? - admk vs bjp

தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது என டெல்லியில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து அண்ணாமலையின் தனித்துப் போட்டி என்ற கனவை தகர்த்துள்ளது. அண்ணாமலையின் கோரிக்கைகளை டெல்லி மேலிடம் ஏற்காததற்கான காரணம் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Mar 30, 2023, 10:06 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் 2021 சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக - பாஜக கூட்டணி இடையே கருத்து மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டன. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜகதான் காரணம் என அதிமுகவில் இருக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசிய கருத்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. 2021-ல் தேர்தல் முடிந்த பின்னர் பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை, திமுக மீது குற்றச்சாட்டு, பொதுக்கூட்டம், போராட்டம் என நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று பொதுவெளியில் பேசும் அளவிற்கு செயல்பட்டு கொண்டிருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "பாஜகவுடன் திமுக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது" என கூறியிருந்தார். அப்போது இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "சி.வி.சண்முகம் எப்போது பாஜகவில் சேர்ந்தார். பாஜகவின் கூட்டணி நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு அவர் யார்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதிமுகவிற்கும், பாஜகவிற்கு இங்கே இருந்துதான் கருத்து மோதல்கள் ஏற்பட தொடங்கின. அப்போது இருந்தே அண்ணாமலை தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பின்னர், "எத்தனை நாட்களுக்கு தான் ஓபிஎஸ் வாழ்க, ஈபிஎஸ் வாழ்க என்று கோஷம் போடுவது, தமக்கென்று ஒரு வாக்கு சதவீதத்தை உருவாக்க தனித்துப் போட்டியிட தயாராகுங்கள்" என அண்ணாமலை நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருந்தார்.

இதற்கு, அதிமுக தரப்பில், "அவர் அவர் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக இது போன்ற கருத்துகளை தெரிவிப்பது சாதாரணம். அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது" என பதிலளிக்கப்பட்டது. அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு தரப்பிற்கும் பொதுவாகவே பாஜக செயல்பட்டது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜகவின் கடைக்கண் பார்வை தன் மீது விழாதா என இரண்டு தரப்பும் எதிர்பார்த்தது. நீதிமன்றங்களில் வழக்குகள், நிர்வாகிகளுடன் ஆலோசனை என்று இரண்டு தரப்பும் செயல்பட்டு கொண்டிருந்த போது ஈரோடு கிழக்கில் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் 2021-ல் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனிடம் பேசி தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக முயற்சி செய்ததாக கூறப்பட்டது. பின்னர், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஜி.கே.வாசனை வைத்தே அதிமுக போட்டியிடும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் முக்கியமான தேர்தலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பார்க்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலை காரணமாக வைத்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு தரப்பையும் ஒன்றிணைக்க பாஜக ஒரு முயற்சி எடுத்தது. ஆனால் பாஜகவின் இந்த முயற்சியை ஈபிஎஸ் தரப்பினர் விரும்பவில்லை.

இடைத்தேர்தலில் உச்சநீதிமன்றம் வரை சென்று இரட்டை இலையை பெற்ற எடப்பாடி தரப்பினர், ஈரோடு கிழக்கில் முஸ்லீம் வாக்குகள் பெருமளவில் இருந்ததால் பாஜகவினர் பிரச்சாரத்திற்கு வருவதற்கு விரும்பவில்லை என கூறப்படுகிறது. "அண்ணாமலை தனியாக பிரச்சாரம் செய்வார், நான் தனியாக பிரச்சாரம் செய்வேன்" என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கில் 66,000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் அதிமுக தோல்வியை தழுவியது. "பாஜக கூட்டணியில் இருந்ததால் 43,000 முஸ்லீம் வாக்குகளை இழந்துள்ளோம். இதுவே தோல்விக்கு காரணம்" என ஈபிஎஸ் தரப்பு செங்கோட்டையன் கூறிய கருத்து கூட்டணி இடையே புயலை கிளப்பியது.

கடந்த மாதம் பாஜகவின் மாநில பொறுப்பில் இருந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார், அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வு அதிமுக, பாஜகவில் இருக்கக்கூடிய இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்களுக்கு இடையில் உச்சகட்ட கருத்து மோதலை ஏற்படுத்தியது. "நான்கு ஆண்டுகள் எங்களால்தான் ஆட்சியில் இருந்தீர்கள், கூட்டணிக்காக ஏன் கமலாலயம் வந்தீர்கள்" என பாஜகவினர் பேச, ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் எரிப்பு வரை இந்த விவகாரம் சென்றது. இதற்கு "அண்ணாமலை பக்குவப்பட வேண்டும், பாஜகவின் தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும், அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் கிளர்ந்து எழுந்தால் தாங்காது" என அதிமுக தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

பின்னர் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்தால் மேல்மட்ட நிர்வாகிகள் வேண்டுமானால் கையை குலுக்கி கொள்ளலாம். இரண்டு கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தேர்தலில் இணைந்து பணியாற்றுவது கடினம் என பேசப்பட்டது. இதில் இருந்து தனித்துப் போட்டி என்ற உறுதியான நிலைப்பாட்டை அண்ணாமலை எடுத்தாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக தொடருவேன்" என கூறியிருந்தார். இது குறித்து டெல்லி மேலிடத்தில் பேச உள்ளதாகவும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்து கொண்டு வந்தார்.

டெல்லி மேலிடத்திற்கு அண்ணாமலை கூறியது என்ன?: தனித்துப் போட்டி குறித்து டெல்லி மேலிடத்தில் பேசிய அண்ணாமலை, "2019ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்து நாம், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2024-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் 5 தொகுதிகளுக்கு மேல் பெறமுடியாது. அதற்கும் அவர்கள் நம்மை வெற்றிபெற வைப்பார்களா என்பது சந்தேகம்தான். ஏன்னென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலைவிட 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கியே அதிமுகவினர், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி நகர்கிறார். கூட்டணி அமைத்தும் பெரிய பலன் கிடைப்பதாக தெரியவில்லை. ஆனால் தனித்துப் போட்டியிட்டால் கட்சியாவது வளர்ச்சி பாதையில் செல்லும். அதற்கு ஒரு நல்ல முடிவு எடுங்கள்" என பேசியதாக கூறப்படுகிறது.

அமித் ஷாவின் நிலைப்பாடு: நேற்று (மார்ச் 29) தினம் டெல்லியில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தமிழகத்தில் அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது" என கூறினார். இதன் மூலம் அண்ணாமலையின் கோரிக்கைகள் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் கோரிக்கைகள் ஏன் மறுக்கப்பட்டது என தமிழக பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் விசாரிக்கும் போது, "2024-ல் மூன்றாவது முறை மோடியை பிரதமராக்கவும், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் எனவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இருக்கக்கூடிய 90 சதவீதத்திற்கு மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கும் நிலையில் அவருடன் கூட்டணி அமைக்கவே டெல்லி மேலிடம் விரும்புகிறது. வரக்கூடிய கர்நாடகா தேர்தல் பாஜகவிற்கு கடும் சவாலாக அமையும் என்று பாஜகவினர் நினைக்கின்றனர். இந்த சமயத்தில் தமிழகத்தில் தனித்து போட்டியிட பாஜக விரும்பவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாக செல்ல அண்ணாமலைக்கு அறியுறுத்தப்பட்டுள்ளது. இதுவே அண்ணாமலையின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த காரணங்கள் ஆகும்" என கூறினார்.

கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலையின் நிலைப்பாடு எந்த முடிவாக இருந்தாலும் நன்மை தான் என கூறப்படுகிறது. தனித்துப் போட்டியிட்டால் கட்சியை வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்று 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகி விடலாம் அல்லது கூட்டணி அமைக்கும் பட்சத்தில் இது போன்ற நிலைப்பாட்டால் அதிமுகவில் இருந்து அதிக இடங்களை கேட்டு பெறலாம் என்பதே அண்ணாமலையின் வியூகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காத பட்சத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், பாமக மற்றும் இதர கட்சிகளுடன் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷாம், "அதிமுகவுடனான கூட்டணி தொடர்கிறது என்ற அமித் ஷாவின் கருத்து ஆச்சரியம் அளிக்கவில்லை. பாஜகவை பொறுத்தவரை டெல்லி மேலிடம் தான் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யும். டெல்லி மேலிடத்தின் முடிவுகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்றுவதற்கும் தயங்க மாட்டார்கள். தனித்துப் போட்டி என்கிற பலப்பரீச்சையை பாஜக தற்போது விரும்பாது. முடிந்த அளவிற்கு கூட்டணியில் இருந்து அதிக இடங்களை மட்டுமே டெல்லி மேலிடம் எதிர்பார்ப்பார்கள். அதிமுகவிற்கும் பாஜகவை விட்டு தனித்து போட்டி என்ற சூழல் இருப்பதாக தெரியவில்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: சென்னை, காஞ்சிபுரத்தில் 6 இடங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு - அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.