கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் பராமரிப்பு, அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் உள்பட ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட அளவிலான பணிக்குழுவை அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இப்பணிக்குழுவின் சேவைகள் குறித்து சமூக நலத்துறை செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,
- கரோனாவால் பெற்றோரை இழந்த அல்லது பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குதல்
- பெற்றோர்கள் சிகிச்சையில் இருக்கும்போது குழந்தைகளை கவனித்துக் கொள்ள உறவினர்கள் அல்லது பாதுகாவலர்கள் இல்லாத நிலையில், தற்காலிகமாகக் குழந்தைகள் இல்லங்களில் அவர்களைத் தங்க வைத்தல்
- கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்குதல்
- கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக் காலத்தில் ஊட்டச்சத்து வழங்குதலை உறுதி செய்தல்
- ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கான கரோனா பராமரிப்பு மையம் அமைத்தல்
போன்ற சேவைகளை குழந்தைகள் நலனில் அக்கறைகொண்டு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: வீட்டிலிருந்தே கரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் - புதிய கருவிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி!