ETV Bharat / state

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கு தேர்வானோரின் பெயர்கள் வெளியீடு! - ஆளுயர் ஆர்என் ரவி

சமூக சேவை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ளார். குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

social
social
author img

By

Published : Jan 22, 2023, 10:51 PM IST

சென்னை: சமூகசேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தனிநபர்கள், நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தார். சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது பெறுபவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்களை ஆளுநர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி சங்கத்தின் செயலாளர் ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி சமூக சேவை விருதுக்கும், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் 'சிறுதுளி' தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த வனிதா மோகன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குடியரசு தினத்தன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கவுள்ளார்.

சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி சங்கம் கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இச்சங்கம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1,700 கிராமங்களில் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளை தொடங்கி, ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறது. சிறுதுளி என்ஜிஓ, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் உயிர்நாடியாக விளங்கும் நொய்யல் நதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகளுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.