ETV Bharat / state

நீட் தேர்வுக்கு எதிராக சமூக நீதி போராட்டம்- மு.க. ஸ்டாலின்! - நீட்

நீட் தேர்வுக்கு எதிராக சமூக நீதி போராட்டம் நடத்தப்படும் என மு.க. ஸ்டாலின் கூறினார். நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை ஆளுநர் திருப்பியனுப்பிய நிலையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

MK Stalin
MK Stalin
author img

By

Published : Feb 5, 2022, 11:23 AM IST

Updated : Feb 5, 2022, 11:38 AM IST

சென்னை : நீட் தேர்வுக்கு எதிராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்தாண்டு (2021) செப்டம்பர் 13ஆம் தேதி மசோதா ஒன்றை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்தது.

இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி, 2022 பிப்.1ஆம் தேதி திருப்பி அனுப்பினார். இது குறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் இந்த மசோதா மாணவர்கள் நலனுக்கு எதிரானதாக உள்ளதாக கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக சமூக நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று (பிப்.5) நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் ஆளுநரின் செயலை மேற்கொள் காட்டி பேசிய மு.க. ஸ்டாலின், “நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை 142 நாள்களுக்கு பிறகு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக சமூக நீதி போராட்டம் தொடரும்” என்றார்.

முன்னதாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அதிமுகவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2010ஆம் ஆண்டு நீட் மசோதா கொண்டுவரப்பட்டபோது காங்கிரஸிற்கு திமுக அளித்த ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால் இந்த மசோதாவே வந்திருக்காது. திமுக தும்பை விட்டு வாலை பிடிக்கிறது. திமுகவின் செயலால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். திமுக அரசின் மெத்தனப் போக்கே மசோதா தமிழ்நாட்டை தாண்டாததற்கு காரணம்” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : இதுதான் நீட் தேர்வை ரத்துசெய்யும் லட்சணமா? - ஸ்டாலினுக்கு ஓபிஸ் கேள்வி

Last Updated : Feb 5, 2022, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.