ETV Bharat / state

பல்கலைக்கழகங்களில் ஆய்வு: கண்காணிப்புக் குழு முடிவு - டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொள்ள, தமிழக அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழு முடிவு செய்துள்ளது.

social justice monitoring  social justice monitoring committee  social justice monitoring study universities  universities  universities in tamil nadu  su veerapandian  சென்னை பல்கலைக்கழகம்  பல்கலைக்கழகங்களில் ஆய்வு  கண்காணிப்புக் குழு  சமூக நீதிக் கண்காணிப்பு கழு  சுப வீரபாண்டியன்  Physical Education and Sports University  டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்  Dr MGR Medical University
கண்காணிப்புக் குழு
author img

By

Published : Nov 26, 2022, 9:25 AM IST

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக ‘சமூக நீதிக் கண்காணிப்பு கழு’ அமைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், சுப வீரபாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மேலும் சமூக நீதி சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் இந்தக் குழு,உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு புகாராக பரிந்துரை செய்யும். இந்நிலையில், சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் 5-வது கூட்டம் கடந்த 21-ம் தேதி தலைவர் முனைவர் சுப வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய 6 பல்கலைக்கழகங்களில் 2022 டிசம்பர் மாதத்திற்குள் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு ஆய்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓ.பி.எஸ், டி.டி.வி மற்றும் சசிகலாவுக்கு எந்த நிலையிலும் கட்சியில் இடமில்லை: ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.