சென்னையில் ஆதரவற்ற நிலையில் சாலையோரங்களில் இருக்கும் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகேயன், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் சீதாராமன் ஆகியோர் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் உணவுகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை உளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் முட்டையுடன் கூடிய உணவுகளை இன்று (செப்டம்பர் 6) வழங்கினர். அதைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கும் முட்டையுடன் கூடிய உணவுகளை வழங்கினர்.