ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தீபக் சிங் (35). இவர் இன்று அதிகாலை அந்தமான் விரைவு ரயிலில் கொண்டு செல்வதற்காக 12 பார்சலை எடுத்துக்கொண்டு பார்சல் ஆபீஸ் சென்றுள்ளார். அப்போது எலக்ட்ரானிக் பொருள் என்று கூறி அந்த பார்சலை புக் செய்து உள்ளார். ஆனால் எலக்ட்ரானிக் பொருட்களை விட அந்தப் பொருட்களின் எடை அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பார்சலை பிரித்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த பார்சலில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் வந்த அதிகாரிகள் செம்மரக்கட்டைகளை மீட்டு ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 12 பெட்டியிகளில் இருந்த 600 கிலோ மதிக்கத்தக்க செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து போலியான முறையில் பார்சல் அனுப்ப முயற்சி செய்த தீபக் சிங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .