ETV Bharat / state

கிளிக் லிங்க், கெட் லிமிட்லெஸ் மணி - உஷார் மக்களே!

லாட்டரி, பரிசுப்பொருள்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளதாக செல்பொன் எண்ணுக்கு லிங்குடன் வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறுவதைத் தடுப்பது குறித்தும், அவற்றின் வகைகள் குறித்தும் கீழே காண்போம்.

லிங்குடன் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தொடர்பான புகைப்படம்

author img

By

Published : Oct 15, 2021, 7:36 AM IST

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, மோசடி பேர்வழிகளும் தங்களைத் தொடர்ச்சியாகத் தகவமைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் செல்போன்கள் மூலம் ஆன்லைனில் திருடுவோர் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

“ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், நிதி மோசடிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முன்னரே பொதுமக்களை அறிவுறுத்தியிருந்தார்.

லிங்குடன் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தொடர்பான புகைப்படம்
லிங்குடன் அனுப்பப்படும் குறுஞ்செய்தி தொடர்பான புகைப்படம்

இணைய வழிக்குற்றம் 400 மடங்கு அதிகரிப்பு

நாட்டின் பாதுகாப்பு ஆலோசகரே எச்சரிக்கும் அளவுக்கு இணையவழி நிதி மோசடிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன.

இணையவழிக் குற்றங்கள் 400 மடங்கு அதிகரித்திருப்பதாக சில மாதங்களுக்கு முன்பாக அஜித் தோவல் அதிர்ச்சிக்குரிய புள்ளிவிவரம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சைபர் குற்றங்கள் ’சதுரங்க வேட்டை’ பட பாணியில், பெரும்பாலும் ஒருவரின் ஆசையைத் தூண்டியே நிகழ்த்தப்படுகின்றன. இத்தகைய சைபர் குற்றங்களின் வகைகளையும், மோசடி கும்பல் அனுப்பும் குறுஞ்செய்திகளையும் குறித்து கீழே காண்போம்.

லாட்டரி பரிசும், பரிசுப் பொருளும்

தனி நபர்களின் செல்போன் எண்ணுக்குப் பரிசுப்பொருள்கள் வழங்கப்படும், லாட்டரி விழுந்துள்ளது என்னும் பல்வேறு பொய்களைக் கூறி லிங்குகளுடன் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.

இதனைக் காணும் பொதுமக்களும், அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, குறிப்பிட்ட அந்த லிங்கை கிளிக் செய்யும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட சுய விவரங்கள் அனைத்தும் மோசடி கும்பலின் வசம் சென்று சேரும். அனைத்துத் தகவல்களும் எளிதில் கிடைக்கப் பெற்றவுடன், மோசடிக் கும்பல் பணத்தை அபகரிக்கும் பணியில் இறங்கும்.

இதிலேயே மற்றொருவிதமாக பரிசாக கிடைத்த பொருளுக்குண்டான தரகு, சேவை வரி, டெலிவரி சார்ஜ் எனப் பலவாறாகவும் பணம் வசூலித்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபடுவார்கள்.

குறுஞ்செய்தி 1: YOUR MOBILE NUMBER WAS SELECTED FOR PAYMENT OF 5.7 CRORE RUPEES IN E.U DONATION 2021 TO Receive SEND/NAME/AGE/ MOBILE NO. to Email: taverphilips@europe.com

லட்சங்களில் வேலைவாய்ப்பு

பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் பெயர்களில் வேலைவாய்ப்பு தொடர்பான குறுஞ்செய்திகள் முதலில் அனுப்பப்படுகின்றன. அவ்வாறு இணைவோருக்கு மாதம் ஒரு லட்சம் வரை மாதச் சம்பளம் கிட்டும் எனத் தெரிவிக்கப்படும்.

ஆனால், நேர்முகத் தேர்வுக்கு முன்பாக குறிப்பிட்ட கணிசமான தொகையைப் பதிவுக் கட்டணமாகச் செலுத்தக் கூறுவர். பணம் செலுத்திய பின்னரே மோசடி வலையில் சிக்கியது பாதிக்கப்பட்டவருக்குத் தெரியவரும்.

குறுஞ்செய்தி 2: Hi Mr/Ms (certified) Flipkrat urgently recruits Part-job/Full-job. Maximum daily salary about Rs.10,000. wa.me/91973866720h

வங்கிக்கணக்கு முடக்கம்

பிரபல வங்கிகளின் லிங்குகளுடன் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளில், சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கு உடனடியாக முடக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு முடக்கப்படாமலிருக்க லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றுவோரின் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் பின்னர் மோசடியாளர் வசம் சென்று சேரும் அபாயம் உண்டாகும்.

குறுஞ்செய்தி 3: Dear SBI user your SBI YONO Account will be blocked today. Please click the link here. Update your PAN CARD Number. Thank you SBI https://bit.ly/3nNul9

மேற்கண்ட வகைகளில் ஏதேனும் ஒன்றில் ஏமாந்தோரின் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள், நாள்தோறும் சென்னை மத்திய குற்றப் பிரிவில் வந்து குவிந்தபடியே உள்ளன. இதன் காரணமாகவே சென்னை காவல் ஆணையர், பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

• வங்கிக் கணக்கு முடக்கப்படும் எனக் குறுஞ்செய்தி வந்தால் அதிலுள்ள லிங்கை கிளிக் செய்யக் கூடாது.

• செல்போன் எண் டி-ஆக்டிவேட் ஆகிவிடும் எனக் குறுஞ்செய்தி வந்தால் அதிலுள்ள லிங்கை கிளிக் செய்யக் கூடாது.

• இணைய வழியில் வரும் பகுதி நேர, முழு நேர பணி தொடர்பான லிங்கை கிளிக் செய்யக் கூடாது.

• பரிசுப் பொருள்கள் (Gifts) பார்சலைப் பெறுவதற்கு, வேலை கிடைப்பதற்கு முன்னரே பணம் செலுத்துதல் ஆகியவற்றைக் கூறி அனுப்பப்படும் லிங்குகளைத் தவிர்த்துவிட வேண்டும். இதேபோல் வெளிநாடுகளில் தொழில்செய்து லாபம் பெறலாம் எனத் தெரிவித்து எண்ணெய், விதைகள், ரசாயனப் பொருள்கள் போன்றவற்றை வாங்க பணம் கட்டச்சொல்லும் அழைப்புகளையும் முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.

• இணையதளங்களிலோ, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலோ வெளிநாட்டவர் எனக்கூறி பழகும் நபர்களுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

• மேட்ரிமோனி தளங்களில் திருமணம் அல்லது மறுமணத்திற்குப் பதிவு செய்யும்போது வரனை நேரில் பார்க்காமல் பரிசுப் பொருள்களைப் பெற பணம் கேட்டால், பணத்தை அனுப்ப வேண்டாம்.

மேற்கண்டவற்றைக் கடைப்பிடித்து ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கணவரை கொலை செய்த மனைவி உள்பட 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.