வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி(38). இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மகன் பாலாஜி (11), 6-ஆம் வகுப்பு படித்து வந்தான். ரகுபதி தனது மனைவியை அழைத்துக்கொண்டு நேற்று(செப் 20) மாலை கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகன் பாலாஜி தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டின் கதவு திறந்து இருப்பதை பக்கத்து வீட்டில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவர் பார்த்துள்ளார். அப்போது சிறுவன் பாலாஜி தொட்டிலில் கட்டிய புடவை கழுத்து இறுகிய நிலையில் மயங்கிய நிலையில் தொங்கியபடி கிடந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தின் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலாஜி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராயலா நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்து போன பாலாஜி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவல்துறையினர் தாக்கியதால் சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்ற நபர்!