ETV Bharat / state

காற்றாடியை பிடிக்க முயன்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு - chennai madhuravoyal small boy dead

சென்னை மதுரவாயலில், அறுந்து போன காற்றாடியை பிடிக்க முயன்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

காற்றாடி  காற்றாடியால் சிறுவன் பலி  மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு  சென்னை மதுரவாயலில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  chennai madhuravoyal small boy dead by electric shock  small boy dead by electric shock  small boy dead  chennai madhuravoyal small boy dead  electric shock
சிறுவன்
author img

By

Published : Sep 5, 2021, 9:27 AM IST

சென்னை: மதுரவாயல் கோவில்பட்டி கோபாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் இவரது மகன் கிஷோர் (11). ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

கிஷோரின் பெற்றோர் இருவரும் நேற்று (செப்.4) காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த கிஷோர் தனது நண்பர்களுடன் வீட்டின் மாடியில் காற்றாடி விட்டு விளையாடியுள்ளார்.

அறுபட்ட காற்றாடியால் நேர்ந்த விபரீதம்

இந்நிலையில், தீடிரென காற்றாடி நூல் அறுபட்டுள்ளது. அப்போது காற்றாடியைப் பிடிக்க முயன்ற கிஷோர் எதிர்பாராதவிதமாக அந்த வழியே சென்ற மின்சார வயரில் கால் வைத்து விட்டார். அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்து கால் கருகியதையடுத்து, சிறுவன் மயங்கியுள்ளார்.

இதனைக் கண்டதும் அப்பகுதி மக்கள் கிஷோரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு கிஷோரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மதுரவாயல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் கிஷோரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட மீனவர் அடித்து கொலை- நண்பர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.