சென்னை கண்ணகி நகரில் உள்ள தனியார் ஏ.டி.எம்.இல் ஸ்கிம்மர் மூலம் வெளிநாட்டுக் கும்பல் ஒன்று பணம் திருடுவதாகவும் மேலும், அவர்கள் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளதாகவும் கண்ணகி நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், தனியார் நட்சத்திர விடுதிக்கு விரைந்த காவல் துறையினர் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த நெக்கோலேய், போரீஸ், லுயுஃபேமீர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மேலும் கைது செய்த நபர்களிடமிருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம். கார்டுகள், ரூ 7.5 லட்சம் இந்திய பணம், 10,000 டாலர் வெளிநாட்டுப் பணம், ஸ்கிம்மர் இயந்திரம், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த கும்பல் வெளிநாட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி அங்கே பணம் எடுக்கவருபவரின் ஏ.டி.எம். கடவுச்சொல்லை தெரிந்துகொண்டு பின்பு போலியான ஏ.டி.எம். கார்டை தயார் செய்து, சென்னை கண்ணகி நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் திருடிவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அவர்களிடம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.