ETV Bharat / state

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு - ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - விக்னேஷ் கொலை வழக்கு ஜாமீன் மனு தள்ளுபடி

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் சிறையில் மரணமடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 6 காவல்துறையினரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

lockup death case  vignesh lockup death case  bail dismissed on vignesh lockup death case  chennai high court  chennai high court dismissed bail on vignesh lockup death case  chennai lockup death case  விசாரணை கைதி விக்னேஷ்  விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு  ஜாமீன் மனுவை தள்ளுபடி  விக்னேஷ் கொலை வழக்கு ஜாமீன் மனு தள்ளுபடி  சென்னை உயர் நீதிமன்றம்
விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு
author img

By

Published : Jul 13, 2022, 7:42 AM IST

Updated : Jul 13, 2022, 9:29 AM IST

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த குற்றஞ்சாட்டினால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி நடத்திய விசாரணையில் விக்னேஷ் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்ததையடுத்து கொலை வழக்காகப் பதிவு செய்து காவலர் பவுன்ராஜ், ஊர்காவல் படையைச் சேர்ந்த தீபக், தலைமைக் காவலர் எழுத்தர் முனாப், குமார், சந்திரகுமார், ஜெகஜீவன் ஆகிய 6 பேரை சிபிசிஐடி காவல்துறை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட காவலர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை நேற்று (ஜூலை 12) நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாகன சோதனையின் போது, விக்னேஷிடம் ஆயுதம், கஞ்சா இருந்ததாகவும், காவலர்களை பார்த்ததும் அவர் தப்பியோடியபோது, கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாகவும், இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாகவும், காவல்துறையினர் தாக்கியதால் மட்டும் விக்னேசுக்கு காயம் ஏற்படவில்லை என வாதிட்டார்.

மேலும் ஊர்காவல் படை வீரர் தீபக்கிற்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் அவரையும் இந்த வழக்கில் கைது செய்துள்ளதாகவும், மனுதாரர்கள் கடந்த 67 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், காவல்துறை விசாரணை பெரும்பகுதி முடிந்து விட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விக்னேஷின் சகோதரர் தரப்பு வழக்கறிஞர், கொலை நடந்தவுடன் விக்னேஷ் உறவினருக்கு 1 லட்சம் ரூபாயை போலீசார் கொடுத்து, கொலையை மறைக்க முயற்சித்தாகவும், போலீஸ் விசாரணையில் கொடூரமாக தாக்கியதால், அவர் இறந்துள்ளதாகவும் வாதிட்டார். மேலும் உடற்கூராய்வு அறிக்கையில், அவரது உடலில் ஏராளமான காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய போவதாக கூறினார். இதையடுத்து, மனுதாரர்கள் தரப்பில் மனுக்களை திரும்ப பெறுவதாக தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுக்களை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 49 வயது ஆணை அடித்து கொன்ற 5 திருநங்கைகள்

Last Updated : Jul 13, 2022, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.