சென்னை: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் 'கிறிஸ்துமஸ் பண்டிகை' கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனை அடுத்து புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இதனால் பண்டிகை காலங்களில் அரசு விரைவுப் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவுகள் நிரம்பியுள்ளன. இதனால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 600 சிறப்புப் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
மேலும் வெளியூர்களுக்குச் சென்று மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:பொங்கல் பரிசு தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000