ETV Bharat / state

வெற்றிக்கரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட்: இஸ்ரோ தலைவர் சிவன் - பிஎஸ்எல்வி

சென்னை: ‘எமிசாட்’ எனப்படும் மின்னணு நுண்ணறிவு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

பிஎஸ்எல்வி சி 45
author img

By

Published : Apr 1, 2019, 4:47 PM IST

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.30 மணியளவில் பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் ஏவப்பட்டது. இதில் ‘எமிசாட்’ என்ற மின்னணு நுண்ணறிவு செயற்கைகோள் 780 கிலோ மீட்டரில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் திட்டம் வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தலைவர் சிவன் விஞ்ஞானிகளிடையே உரையாற்றும்பொழுது பேசியதாவது:

"ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. முதன்முறையாக மூன்று வெவ்வேறு சுற்றுவட்டப் பாதையில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்பட்டது.

ராக்கெட்டின் நான்காவது நிலை மீண்டும் ரீ-ஸ்டார்ட் செய்யப்பட்டு 485 கிலோமீட்டர் தூரத்தில் சோதனை முயற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நான்காவது நிலை சோதனை முயற்சியில் மூன்று முக்கிய செயற்கைகோள் உள்ளன. குறிப்பாக ஐஐஎஸ்டி மாணவர்களது செயற்கைகோள் இதில் செலுத்தப்பட்டுள்ளது.

நான்காவது நிலை சோதனை முயற்சி, மாணவர்களது ஆராய்ச்சி திறனை வளர்க்கும் வகையில் இலவசமாக இஸ்ரோ செய்து வருகிறது. இந்த பிஎஸ்எல்வி சி 45 திட்டத்தில் புதிய குழுவினர் செயல்பட்டுள்ளனர். இந்த வெற்றிக்கு உழைத்த இஸ்ரோ குழுவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த திட்டத்தில் பல்வேறு உதிரிபாகங்கள் பெங்களூரில் உள்ள சில தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. 95 விழுக்காடு ராக்கெட் தயார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் 60- 70 விழுக்காடு உதிரிபாகங்கள் பெங்களூரில் உள்ள தொழிற்சாலையில் வாங்கப்பட்டுள்ளன.

வரும் மே மாதம் இரண்டாவது வாரத்துக்கு மேல் எட்டாம் வகுப்பு முடித்துள்ள 108 மாணவர்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கு வரவுள்ளனர். அவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சியாக விண்வெளி தொழில்நுட்பம், ராக்கெட் தொழில்நுட்பம், செயற்கைக்கோள்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் உருவாகுவர். மே மாத நடுவில் பிஎஸ்எல்வி சி 46, அடுத்து பிஎஸ்எல்வி சி 47 மற்றும் சந்திரயான்-2 ஆகிய திட்டங்கள் உள்ளன. இந்த வருடத்திற்குள் 30 திட்டங்களை முடிக்க திட்டமிட்டு உள்ளோம்" எனக் கூறினார்.

 பிஎஸ்எல்வி சி 45 ராக்கெட் திட்டம் வெற்றிக்கு பிறகு இஸ்ரோ தலைவர் சிவன் விஞ்ஞானிகளிடையே உரையாற்றும்பொழுது பேசியதாவது: ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு செயற்கைக்கோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. முதன்முறையாக மூன்று வெவ்வேறு சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ராக்கெட்டின் நான்காவது நிலை மீண்டும் ரீஸ்டார்ட் செய்யப்பட்டு 485 கிலோமீட்டர் தூரத்தில் சோதனை முயற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நான்காவது நிலை சோதனை முயற்சியில் மூன்று முக்கிய செயற்கைகோள் உள்ளன. குறிப்பாக ஐஐஎஸ்டி மாணவர்களது செயற்கைகோள் இதில் செலுத்தப்பட்டுள்ளது. நான்காவது நிலை சோதனை முயற்சி, மாணவர்களது ஆராய்ச்சி திறனை வளர்க்கும் வகையில் இலவசமாக இஸ்ரோ செய்து வருகிறது. இந்த பிஎஸ்எல்வி சி 45 திட்டத்தில் புதிய குழுவினர் செயல்பட்டுள்ளனர். இந்த வெற்றிக்கு உழைத்த இஸ்ரோ குழுவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள். இந்த திட்டத்தில் பல்வேறு உதிரிபாகங்கள் பெங்களூரில் உள்ள சில தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. 95 சதவீத ராக்கெட் தயார் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் 60- 70 சதவீத உதிரிபாகங்கள் பெங்களூரில் உள்ள தொழிற்சாலையில் வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்களும் இந்த திட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளனர். மேலும் இந்த ராக்கெட் ஏவுதலை 1200 பொதுமக்கள் நேரடியாக கண்டு களித்தனர். அடுத்த ராக்கெட் ஏவுதலை 5000 பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இது மேலும் 10,000 ஆக அதிகரிக்கும். வரும் மே மாதம் இரண்டாவது வாரத்துக்கு மேல் எட்டாம் வகுப்பு முடித்துள்ள 108 மாணவர்கள் இந்தியா முழுவதும் தேர்வு செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துக்கு வரவுள்ளனர். அவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சியாக விண்வெளி தொழில்நுட்பம், ராக்கெட் தொழில்நுட்பம், செயற்கைக்கோள்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் உருவாகுவர். மே மாத நடுவில் பிஎஸ்எல்வி சி 46, அடுத்து பிஎஸ்எல்வி சி 47 மேலும் சந்திரயான்-2 ஆகிய திட்டங்கள் உள்ளன. இந்த வருடத்திற்குள் 30 திட்டங்களை முடிக்க திட்டமிட்டு உள்ளோம், என்றார். 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.