சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவம் கிடைப்பதற்காக தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முதல்முறையாக "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் சுகாதார பணியாளர்கள் நேரடியாக மக்கள் வீட்டுக்கே சென்று அவர்களது உடல்நிலையை பரிசோதனை செய்வது, அவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவது ஆகியவற்றைச் செய்வார்கள்.
இத்திட்டத்தை முதலமைச்சர் நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் தொடங்கி வைக்கிறார்.
"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்திற்கு சிவகார்த்திகேயன் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மகத்தான திட்டம்தான் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற வசனத்தை இதில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்