ETV Bharat / state

'ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளும் சசிகலாவிடம் சென்றுவிடுவர்' - கார்த்தி சிதம்பரம்!

author img

By

Published : Jan 20, 2021, 7:13 AM IST

சென்னை: சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளும் சசிகலாவிடம் சென்று விடுவார்கள் என, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை
சென்னை

சென்னை குரோம்பேட்டையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில், தனியார் மண்டபத்தில் நேற்று(ஜன.19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறுகையில்," எங்களைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். நிச்சயமாக 2021 தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றியடையும். வரும் 23 ஆம் தேதியிலிருந்து ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்.

அதிமுக அரசு என்பது பாஜக அரசின் கீழ் செயல்படும் ஒரு அரசு. முதலாளி அழைத்தால் தொழிலாளி செல்லும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது டெல்லி சென்றுள்ளார். அவரால் ஒருபோதும் தமிழருக்கான உரிமைகளை பெற்றுத் தர முடியாது. சசிகலா சிறையில் இருந்து வந்ததும் ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளும் சசிகலாவிடம் சென்று விடுவார்கள். தேர்தலுக்கு முன்னதாக அல்லது தேர்தல் தோல்விக்குப் பின்னரோ ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலா தலைமையில் செயல்படும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.