ETV Bharat / state

மிக்ஜாமுக்கு முன் - மிக்ஜாமுக்கு பின் - சென்னை கண்ட மாற்றங்கள்! 4 நாட்களுக்கு பின் மீண்டெழும் மாநகரம்! - கழிவுநீர்களை அகற்றும் பணிகள்

மிக்ஜாம் புயல் தனது கோர கரத்தால் சென்னையை தீண்டிவிட்டு சென்று நான்கு நாட்கள் கடந்த நிலையில், மாநகரம் மெல்ல தனது இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளது. அதுகுறித்து விவரிக்கிறது இச்செய்தித் தொகுப்பு.

மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் இருந்து மீண்டெழும் சென்னை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 10:40 PM IST

சென்னை: மிக்ஜம்(Michaung) புயலின் கொடூரத் தாண்டவத்தால் சென்னை நகரம் மூழ்கியது என்றாலும் தற்போது அரசின் நடவடிக்கைகளாலும், பலரின் ஒத்துழைப்பாலும் மெது மெதுவாக சென்னை அதன் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்று கூறலாம். ஒகி, தானே, நீலம், மாண்டஸ், நிவர், நிஷா ஆகிய புயல்களின் பாதிப்புகள் மற்றும் அதன் பெயர்களை மக்கள் இன்றளவும் மறந்து இருக்க முடியாது.

அதன் வரிசையில் தற்போது மிக்ஜாம் புயலும் மக்களின் மனதில் நீங்காத பாதிப்புகளை உண்டாக்கிச் சென்று உள்ளது. தொடர்ந்து 4வது நாளின் மீட்புப் பணிக்குப் பிறகு சென்னை மெல்ல மெல்ல அதன் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. மீண்டெழும் சென்னையின் நிலை குறித்து விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.

மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை என்பது, 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை ஆகும். இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு சேதங்களுக்குப் பிறகு மிக்ஜாம் புயலானது சென்னையில் இருந்து விலகி ஆந்திராவில் கரையைக் கடந்தது. இதனால் கடுமையாக பாதிப்படைந்த தமிழ்நாட்டிற்கு மத்திய அமைச்சர் 450 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்தார். 4 நாட்களுக்கு தொடர் மீட்புப் பணிகள் நீடித்துக் கொண்டிருக்கும் வேளையில், பல இடங்கள் அதன் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில், பல பகுதிகளின் சேதம் தற்போதுதான் வெளிவருகிறது.

குறிப்பாக வடசென்னையில், ஒரு சில பகுதிகளில் இன்னும் மழை நீரானது வடியவில்லை. இதில் பெருமளவில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வேளச்சேரி, மணலி, மடிப்பாக்கம், மனப்பாக்கம், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், புளியந்தோப்பு, கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து கொண்டதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

மேலும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் மற்றும் இயற்கை உபாதைகளுக்குக் கூட இடமின்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பல தனியார் நிறுவங்கள் வீட்டில் இருந்து வேலை(Work From Home) பார்ப்பதற்கான வசதிகளையும் ஏற்பாடு செய்தனர். புயலுக்கான தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சிகளிலிருந்து சாமாணிய மக்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து புயலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர், "இந்தப் பேரிடர் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே ஏற்பட்டுள்ள பேரிடர். மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன" என்று முன்னதாக அறிக்கை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அரசு சார்பில் மீட்புப் பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தகவல் வெளியிடப்பட்டது.

சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு: மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட நடவடிக்கை குறிப்பில், "புயல் தாக்கத்தின் காரணமாக, பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை ஆயிரத்து 60 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அந்த முகாம்களில் 78ஆயிரத்து 663 நபர்கள் பயனடைந்துள்ளனர். மழைநீர் வடிந்த இடங்களில் 526 நடமாடும் மருத்துவ முகாம்களும், 97 நிலையான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்" என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்: முடிச்சூர்,வரதராஜபுரம், ராயப்பநகர், அமுதம் நகர், பிடிசி கோட்டரஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 அடிக்கு மேல் வெள்ளம் சூழ்ந்துள்ளதோடு பல இடங்களில் வீட்டின் தரை தளம் மூழ்கி ஏரி போல் காட்சியளிக்கிறது. இதனால் குடியிருப்புகளில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்கவைத்து வைத்து வருகின்றனர். தொடர்ந்து, தற்போது சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் மெல்ல மெல்ல வடிய தொடங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை குடிநீர் ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட நீர், ஆந்திர மாநிலம் - பிச்சாட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் வரும் மழைநீர் உள்ளிட்டவையால் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு மற்றும் கூவம் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழை நின்று 3 நாட்களுக்கு மேலாகியும் திருவள்ளூர் அருகே காக்களூரில் ம.பொ.சி.நகர், வி.எம்.நகர், விவேகானந்தா நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த வெள்ள நீர் வடியவில்லை என பொதுமக்கள் குற்றம்ச்சாட்டி உள்ளனர்.

தொடர்ந்து அதிகரிக்கும் முனைப்பில் இருக்கும் பாதிப்புகள்: மணலியில் ராஜிவ்காந்தி நகர் பகுதியில் மின் இணைப்பு, போதிய உணவு, குடிநீர் வசதி இல்லாமல் குடியிருப்பு வாசிகள் பரிதவித்து வருகின்றனர். மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். எண்ணூர் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரில் கழிவு நீர் கலந்துள்ளது. இந்த நிலையில், தற்போது கச்சா எண்ணெய்யும் கலந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பெட்ரோலியம் தொழிற்சாலைகளை மழைநீர் சூழ்ந்திருக்கும் நிலையில், அங்கிருந்து கச்சா எண்ணெய் கசிந்து வருவதால், எண்ணூர் முகத்துவாரம் நிறம் மாறி வேறு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு நோய் பாதிப்புகளும் வரலாம் என அச்சம் நிறைந்துவருகிறது.

சதுப்பு நிலம் பாதிப்பு: வீராங்கால் ஓடை வழியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடையும் நீரானது, இந்த மிக்ஜாம் புயலால் மிகவும் மாசு அடைந்துள்ளது. இதனால் அங்கு இருக்கும் தற்போதைய பறவைகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது.

கழிவுநீர்களை அகற்றும் பணிகள்: சென்னையில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீரானது சாலையில் தேங்கிய நிலையில், அதனை அகற்றக்கோரி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், சி.ஐ.டி நகர், தொண்டையார் பேட்டை, கே.கே.நகர், அம்பத்தூர், மாம்பலம், சைதாப்பேட்டை போன்ற பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

சேதமடைந்த சாலைகள்: மிக்ஜாம் புயலினால் பிரதான சாலைகளில் இருந்து குறுகிய சாலைகள் வரை பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ளது. குறிப்பாக, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், கொரட்டூர், வில்லிவாக்கம், போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் பெரும்அளவு சேதமைடைந்துள்ளது.

நடவடிக்கை பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது, "தண்ணீர் வடிந்த இடங்களில் எல்லாம் குப்பைகள் குவிந்துள்ளது. அந்தக் குப்பைகளையும், முறிந்து விழுந்து கிடக்கும் மரங்களை எல்லாம் அப்புறப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளம் வடிந்த இடங்களில் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பள்ளிக்கரணை, முடிச்சூர், ஆர்.கே.நகர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற 10 மோட்டார்கள் கேட்கப்பட்ட நிலையில், அவைகள் தேவை நிறைந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், மணலி, கொளப்பாக்கம், மணப்பாக்கம் ஆகிய இடங்களில் தண்ணீர் இன்னும் குறைந்த அளவில் உள்ளது. அந்த இடங்களுக்கு எல்லாம் மோட்டார் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார். இதையடுத்து சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மற்றும் நிவாரன பொருட்கள் கொடுக்கும் பணிகளானது தொடர்ந்து மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் சிக்கிய இருவரின் உடல் மீட்பு.. மேலாளர், மேற்பார்வையாளர் இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.