ETV Bharat / state

பிற மாநிலங்களில் செய்ய இயலாததை செய்த ஸ்டாலினுக்கு நன்றி: சீத்தாராம் யெச்சூரி

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

sitaram yechury
author img

By

Published : Jun 12, 2019, 5:24 PM IST

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ளது. பிற மாநிலங்களில் செய்ய இயலாத செயலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் செய்துள்ளார். மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளை ஒன்றிணைத்து வழிநடத்தியதன் விளைவுதான் இந்த மாபெரும் வெற்றி. அவருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற கூட்டணி மற்ற மாநிலங்களில் அமையாத காரணத்தால் பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது.

சீத்தாராம் யெச்சூரி பேட்டி

புல்வாமா, பால்கோட் தாக்குதலை முன்மொழிந்து மக்களின் வாழ்வாதார பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை, பொருளாதார வீழ்ச்சி, சிறு குறு தொழில்கள் நசுக்கப்பட்டது போன்ற பிரச்னைகளை மறைத்து பிரசாரம் செய்து பா.ஜ.க வெற்றிபெற்றுள்ளது. தேர்தலில் 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக பா.ஜ.கவே கூறியுள்ளது. நரேந்திர மோடி சிறந்த தலைவர் என்ற தோற்றத்தை தேர்தல் ஆணையமும், ஊடகங்களும் உருவாக்கின. 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்துள்ளன. இதுபற்றி முழு தகவல் கிடைத்தபின்னர் மதச்சார்ப்பற்ற ஜனநாயக கட்சியினரோடு கலந்து ஆலோசித்து நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

மேலும் அவர், ”இதுவரையில் ஒவ்வொரு கட்சியும் நாடெங்கும் எவ்வளவு வாக்கு பெற்றது என்கிற விகிதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.இந்துத்துவத்துக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் இடையே நடக்கும் போட்டியில் சமத்துவத்தை காப்பாற்ற, சிறுபான்மையினரின் சுதந்திரத்தை, உரிமையை பாதுகாப்பது என மதச்சார்பற்ற ஜனநாயகத்தை காப்பாற்ற போராடும் கட்சிகள் அனைத்தும் இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை சிபிஎம் கடுமையாக எதிர்க்கிறது. அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். திணிப்பு என்பது இருக்கக்கூடாது. இந்திய வரலாறுக்கு பதில் இந்துத்துவ கட்டுக்கதைகளையும், இந்திய தத்துவத்திற்கு பதிலாக இந்துத்துவ தத்துவத்தங்களையும் முன்னிறுத்தும் புதிய கல்விக் கொள்கை வரவு திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். ஆன்லைனில் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பில் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

”நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. பிற மாநிலங்களில் செய்ய இயலாத செயலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் செய்துள்ளார். மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகளை ஒண்றிணைத்து வழிநடத்தியதன் விளைவு தான் இந்த மாபெரும் வெற்றி. அவருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற கூட்டணி மற்ற மாநிலங்களில் அமையாத காரணத்தால் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.  

புல்வாமா, பால்கோட் தாக்குதலை முன்மொழிந்து மக்களின் வாழ்வாதார பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், விவச்சாயிகள் தற்கொலை, பொருளாதார வீழ்ச்சி, சிறு குறு தொழில்கள் நசுக்கப்பட்டது போன்ற பிரச்னைகளை மறைத்து பிரச்சாரம் செய்து பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் செலவுகளாக 27 ஆயிரம் கோடி செலவு செய்ததாக பா.ஜ.க வே கூறியுள்ளது. நரேந்திர மோடி சிறந்த தலைவர் என்ற தோற்றத்தை தேர்தல் ஆனையமும், ஊடகங்களும் உருவாக்கியது. 

300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்துள்ளது. இதுபற்றி முழு தகவல் கிடைத்தபின்னர் மதச்சார்ப்பற்றா ஜனநாயக கட்சியினரோடு கல்ந்து ஆலோசித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இதுவரையில் ஒவ்வொரு கட்சியும் நாடெங்கும் எவ்வளவு வாக்கு பெற்றது என்கிற விகிதத்தை தேர்தல் ஆனையம் வெளியிடவில்லை.

இந்துத்துவத்துக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும் இடையே நடக்கும் போட்டியில் சமத்துவத்தை காப்பாற்ற சிறுபான்மையினரின் சுதந்திரத்தை, உரிமையை பாதுகாப்பது, நீதித்துறை, தேர்தல் ஆணையம், சிபிஐ போன்ற துறைகளை செயலிழக்க செய்யும் ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ சக்திகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்வது, கார்ப்ரேட் நிறுவனங்களிடமிருந்து மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவது, உத்திர பிரதேச் முதல்வரை விமர்சித்து ட்விட் செய்த காரணத்தால் செய்தியாளர் கைது செய்யப்பட்டார் இதுபொன்ற கருத்து சுதந்திரத்தை நசுக்கும், தனிநபர் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கைகளை முறியடிப்பது என்று மொத்தம் நான்கு சவால்கள் தற்போது நிலவியுள்ளது. இந்த சவாலகளுக்கு முக்கியத்துவம் அளித்து சிபிஎம் செயல்படும். மதச்சார்பற்ற ஜனநாயகத்தை காப்பாற்ற போராடும் கட்சிகள் அனைத்தும் இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

புதிய கல்வி கொள்கை திட்டத்தை சிபிஎம் கடுமையாக எதிர்க்கிறது. அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். திணிப்பு என்பது இருக்கக்கூடாது. இந்திய வராலாறுக்கு பதில் இந்துத்துவ கட்டுக்கதைகளும், இந்திய தத்துவத்திற்கு பதிலாக இந்துத்துவ தத்துவத்தை முன்னிறுத்தும் புதிய கல்வி கொள்கை வரவு திட்டத்தை நாங்கம் எதிக்கிறோம். ஆன்லைனில் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பில் எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.

உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திப்போம் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.    

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.