ETV Bharat / state

சிங்கார சென்னை 2.0; ரூ.25 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்

author img

By

Published : Feb 15, 2023, 10:41 PM IST

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ஆலந்தூர், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட வேளச்சேரி முதல் ஆதம்பாக்கம் வரையிலான எம்.ஆர்.டி.எஸ். பாலங்களின் கீழ் பகுதிகளில் அழகுபடுத்தும் பணிகள் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை
சிங்கார சென்னை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள் மற்றும் 12 ரயில்வே மேம்பாலங்கள் என 26 முக்கியப் பாலங்கள், 16 வாகனச் சுரங்கப்பாதைகள், 5 பாதசாரிகள் சுரங்கப்பாதைகள், 4 நடைமேம்பாலங்கள் மற்றும் 234 சிறுபாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து, பசுமையாக்கி அழகுபடுத்தும் பணி என பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட எம்.ஆர்.டி.எஸ். பாலத்தின்கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் செடிகள் நடுதல், பசுமைப் புல்வெளிகள் அமைத்தல், வண்ண ஓவியங்கள் வரைதல், செயற்கை நீரூற்று அமைத்தல் போன்ற அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடையாறு மண்டலம், வார்டு-176, வீராங்கல் ஓடை அருகில் எம்.ஆர்.டி.எஸ். பாலத்தின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.131 இலட்சம் மதிப்பீட்டில் இருபுறங்களிலும் செடிகள் நடுதல், செடிகளுக்கு தானியங்கி முறையில் தண்ணீர் பாய்ச்சுதல், நடைபாதைகளில் விளக்குகள் அமைத்தல், செயற்கை நீரூற்று அமைத்தல், பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் அமைத்தல், துருப்பிடிக்காத கைப்பிடிகள் அமைத்தல், நுழைவுவாயிலில் இரும்பு கதவுகள் அமைத்தல், வண்ண ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருங்குடி மண்டலம், வார்டு-186, வேளச்சேரி உள்வட்டச் சாலை புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். பாலங்களின் கீழ் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.41.25 இலட்சம் மதிப்பீட்டில் செயற்கை நீரூற்று, பசுமை புல்வெளி, செடிகள் நடுதல், நடைபாதை அமைத்தல், மின்விளக்கு வசதி உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரசத்தில் கொத்தமல்லி எங்கே? கடுப்பான திருப்பத்தூர் கலெக்டர்.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.