ETV Bharat / state

கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை: தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - madurai highcourt bench

மதுரை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ மையங்கள் அதிக இடங்களில் அமைத்து உரிய நிதி ஒதுக்கி, சிகிச்சை அளிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai  highcourt
madurai highcourt
author img

By

Published : Jul 29, 2020, 8:18 PM IST

திருச்சியை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,”கரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு எவ்வித மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் சித்த மருந்து மூலம் கரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மிக குறைந்த அளவிலான பணமே செலவாகும்.

ஆனால் சித்த மருத்துவத்திற்காக அரசு குறைந்த அளவில் மட்டுமே நிதி ஒதுக்குகிறது. திருச்சி மாவட்டத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.அவர்களுக்கு சித்த மருந்து மூலம் சிகிச்சை அளிக்க திருச்சியில் சித்த மருத்துவ மையம் இல்லை.

கரோனா தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையை நாடினால், மருத்துவமனையில் காலி இடங்கள் இல்லை என கூறி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைகாக சுமார் 5 லட்சம் வரை செலவாகிறது. ஆனால் சித்த மருத்துவ முறையை நாடினால் மிக குறைவான பணமே செலவாகும். எனவே சித்த மருத்துவ மையம் தமிழ் நாட்டில் அதிக இடங்களில் அமைக்க உரிய நிதி ஒதுக்கி, சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்.

இதுதொடர்பாக அரசு உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை”. என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மட்டுமே சித்த மருத்துவ மையம் உள்ளது. அதில் சுமார் 1800 படுகைகள் உள்ளன. அதில் சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை” என கூறப்பட்டது.

அதற்கு அரசு தரப்பில், “சித்த மருத்துவத்திற்காக 186 கோடி ரூபாய் ஒத்துக்கப்பட்டுள்ளது. மேலும் 16 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 31 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 191 தாலுகா மருத்துவமனை உள்பட 1000 கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 891 மருத்துவர்கள் பணியில் உள்ளனர்” என பதிலுரைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டெம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.