தாம்பரம் சானடோரியத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கரோனா வைரஸ் தாக்காமல் இருக்க, உடல் வலிமையையும், நோய்த் தடுப்பாற்றலையும் அதிகரிக்கும் வகையிலான, உணவு வகைகளி பட்டியல், நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.
கரோனா பாதிப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களை பாதுகாக்கும் சுகாதார நெறிமுறைகள் குறித்து இந்நிறுவனத்தில் உள்ள மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 270 மருத்துவர்கள் மற்றும் சித்த மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பயிற்சி பெற்று, கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிபுரியத் தயாராக உள்ளனர்.
கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் விதமாக 'சார்ஸ்' வைரசின் புரதத்துடன் 15 வகையான சித்த மருந்துகளை இணைத்து சோதனை செய்ததில் நல்ல முடிவு கிடைத்துள்ளது. இதுதவிர சித்த மருத்துவத்தில் கொடிய காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் கபசுரக் குடிநீர் உட்பட ஐந்து வகையான குடிநீர்களை விலங்குகளுக்கு கொடுத்து சோதிக்கும் ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன. விரைவில் இந்த ஆராய்ச்சிகள் இறுதி வடிவம் பெற்று நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3ஆவது வாரத்தில் நடத்த முடிவு!