இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
- பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ். மருத்துவ பட்டப்படிப்புகள், சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2019-20ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்வதற்கு வரும் 28ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
- தமிழ்நாடு அரசு, சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் 2019-20ஆம் ஆண்டிற்கு மருத்துவ பட்டப்படிப்புகளில் அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வில் அல்லது அதற்கு நிகரான அறிவியல் பாடங்களின் தேர்வில், 2019 மருத்துவப் பட்டப்படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்-2019 ) எழுதி, தேர்ச்சி பெற்று உரிய தகுதி மதிப்பெண் பெற்றவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
- படிப்புகளுக்கான அரசு மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் / சிறுபான்மையினரற்ற இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளின் விவரம், தகவல் தொகுப்பேடு பொது மற்றும் சிறப்பு விண்ணப்பதிவிறக்கம் மற்றும் அவற்றின் கட்டணம், குறைந்தபட்ச கல்வித் தகுதி, அடிப்படைத்தகுதி, கல்விக்கட்டணம் மற்றும் இதர விவரங்களுக்கு www.tn.health.org என்ற வலைதளத்தை தொடர்புக் கொள்ளலாம்.
- விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பை 28-8-2019 முதல் 13-9-2019 பிற்பகல் மூன்று மணி வரை மட்டும் அலுவலக வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் பெறும் கடைசி நாள்: 13 -9-2019 மாலை 5.30 மணி வரை. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு