ETV Bharat / state

"டாஸ்மாக்கில் ரூ.130-க்கு சரக்கு கிடைக்கல"! கதறும் மது பிரியர்கள்

அரசு மதுபானக்கடையில் ஆரம்ப கட்ட விலையில் (ரூ.130) விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

"டாஸ்மாக்கில் ரூ.130-க்கு சரக்கு கிடைக்கல"! கதறும் மது விரும்பிகள்- கள்ள சந்தையில் விற்பனையா?

author img

By

Published : Sep 27, 2022, 6:47 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகள் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. ஒரு நாளைக்கு இந்த கடைகள் மூலம் சுமார் ரூ.40 கோடிக்கு அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.

அண்மையில் மதுபான விற்பனை கடைகளில் குறைந்தபட்ச விலையில், அதாவது ரூ.130 ல் விற்றுக்கொண்டிருந்த மது பாட்டில்கள் (180 மில்லி லிட்டர்) கடைகளில் இல்லை என மதுபான விற்பனையாளர்கள் கூறுவதாகவும், அவர்களை ரூ.160 பாட்டில்கள் தான் உள்ளது என கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

"ஏற்கனவே மது பாட்டில்களின் விலையை அரசு உயர்த்தியுள்ள நிலையில், தற்போது குறைந்த விலையில் விற்றுக்கொண்டிருந்த மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பதால், அரசு மது பானக்கடைகளில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது குறைந்த பட்ச விலையே ரூ.160 ஆக உள்ளது. மேலும் மதுபான கடைகள் ரூ.10 சேர்த்து அதிகமாக விற்பதால் 180 மில்லி லிட்டர் மது பாட்டிலுக்கு ரூ.170 கொடுக்க வேண்டியுள்ளது", என மதுபிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் தாங்கள் கொண்டு வரும் பணத்தில் ரூ.100 கொடுத்து வெறும் 90 மில்லி லிட்டர் மட்டும் வாங்கி செல்வதாக கூறும் அவர்கள், அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு மது பாட்டில்கள் கள்ள சந்தைக்கு போகாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

"எங்களுக்கு என்ன உத்தரவு வருகிறதோ, அதைத்தான் செய்கிறோம்", என்கிறார் அரசு மதுபானக்கடை விற்பனையாளர் ஒருவர். மேலும் மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில் வேலை பார்ப்போர் மூலம் மது பாட்டில்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.

இது குறித்து டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளர் ஓருவர் கூறுகையில், "இது மாதிரியான சம்பவங்கள் எல்லா கடைகளிலும் நடக்கவில்லை. குறைந்த விலை மது பாட்டில்கள் காலியாக இருந்தால் மட்டுமே அதற்கு அடுத்த விலையில் உள்ள மது பாட்டில்கள் கொடுக்கப்படும்" என்றார்.

மேலும், கள்ளச் சந்தையில் மது பாட்டில்களை விற்றாலோ அல்லது விற்பனையாளர்கள் கடைகளுடன் இணைந்த பார்களுக்கு கள்ள சந்தையில் விற்க துணை போனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

டாஸ்மாக் மதுபான கடைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, புகார் அளிப்பதற்கு, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, டாஸ்மாக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள போதிலும், டாஸ்மாக் விதிகளுக்கு முரணாக, மதுபான கடைகளில், பீர் மற்றும் மதுபான வகைகள், அரசு நிர்ணயம் செய்த விலையை விட, கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், மதுபான கடைகளுடன் இணைந்த பார்களில், அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குலசேகரப்பட்டினம் தசராவில் சினிமா, டிவி, நடிகர்கள் பங்கேற்கலாம் - உயர் நீதிமன்றம் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.