ETV Bharat / state

கரோனா ஊரடங்கின்போது அரசுக்குச் சொந்தமான கடைகளுக்கான வாடகை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது - தமிழக அரசு பதில்! - MHC

Shop rent waived: கரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் மூடப்பட்டதால், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கடைகளின் வாடகை, குத்தகை தொகை தள்ளுபடி செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடைகளின் வாடகை, குத்தகை தொகை தள்ளுபடி
கடைகளின் வாடகை, குத்தகை தொகை தள்ளுபடி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 2:23 PM IST

சென்னை: கரோனா ஊரடங்கு காலத்தில் 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும், 2021 மே, ஜூன் மாதங்களிலும் கடைகள் முழுமையாக மூடப்பட்டன. இந்த காலகட்டத்தில் வணிகம் நடைபெறாத காரணத்தால், கடைகளுக்கான வாடகை, குத்தகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிடக் கோரி, நாமக்கல் நகராட்சிக்குச் சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனே முக்கியம் - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து!

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடைகளுக்கான வாடகை, குத்தகையை தள்ளுபடி செய்யும்படி 2021 டிசம்பரில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தாமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்து விட்டதாகக் கூறி, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் மற்றும் நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு எதிராக பொன்னுசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில், கரோனா ஊரடங்கு காலத்தில் கடைகள் மூடப்பட்டதால் மாநகராட்சி, நகராட்சி போன்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கடைகளுக்கான 136 கோடியே 44 லட்சத்து 34 ஆயிரத்து 828 ரூபாய் வாடகை மற்றும் குத்தகை தொகைகளை 2023 ஜூன் மாதம் தள்ளுபடி செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வாடகை மற்றும் குத்தகை பாக்கி இல்லாதவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படும் எனவும், அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசாணையை ஆய்வு செய்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தஞ்சை வேளாண் கல்லூரிக்கு பெயர் மாற்ற அறிவிப்பு; எம்.எஸ்.சுவாமிநாதனின் குடும்பத்தினர் வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.