ETV Bharat / state

சென்னையின் அடையாளமாக பட்டினப்பாக்கத்தில் வணிக வளாகம் இருக்கும்! - chennai district news

பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட இருக்கும் மிகப்பெரிய வணிக வளாகம் சென்னையின் அடையாளமாக இருக்கும் என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

shopping-mall-in-pattinapakkam-as-a-symbol-of-chennai

author img

By

Published : Sep 1, 2021, 11:11 PM IST

சென்னை : சட்டப்பேரவையில் மானியக்கோரி மீதான விவாதம் நடைப்பெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி பதிலுரையில் வழங்கினார். அதில், மக்களுக்கு பயன்பெறும் வகையில் பொது நோக்கோடு பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

குறிப்பாக மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 60 நாள்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 393.7 கோடி ரூபாய் செலவில் வண்டலூர் விளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து முனையம் 2022ஆம் ஆண்டிற்குள் நடைமுறைக்கு வரும்.

2030ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் ஒரு லட்சம் தரமான வீடு கட்டித்தருவதாக உறுதிப்படுத்தி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். அதற்கான நிலம் கையகப்படுத்துவதில் நில உரிமையாளருடன் கலந்து பேசி 40 சதவீதம் உரிமையாளருக்கு கொடுத்து வீடுகள் கட்டித்தரப்படும்.

சென்னை நந்தனத்தில் வர்த்தக மையம் கட்டிடம் கட்ட துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைய இருக்கும் வணிக வளாகம் சென்னையின் அடையாளமாக இருக்கும். சுயநிதி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 900 வீடுகள் கட்ட ஆய்வுகள் செய்து தேவையான இடத்தில், தரமாக கட்டித்தரப்படும்.

தனியார் கட்டிடத்திற்கு இணையாக 100வீடுகள் கட்டும் இடத்தில் 50 வீடுகள் நல்ல தரத்தோடு வீடுகள் கட்டித்தரப்படும். மதுரை,கோவை, திருப்பூர், ஒசூரில் பெருநகர வளர்ச்சி குழும வளாகம் ஏற்படுத்தி தரப்படும்.துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் முறையாக நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க : தனியார் கட்டடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படும் - அமைச்சர் முத்துசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.