ETV Bharat / state

சிறைவாசம் முடிந்தாலும் மருத்துவக் கண்காணிப்பில் சசிகலா!

பெங்களூரு: நான்கு ஆண்டுகால சிறைவாசம் முடிந்து விடுதலையான சசிகலா, தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் தான் இருப்பார் என, தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர்
பெங்களூர்
author img

By

Published : Jan 27, 2021, 11:37 AM IST

Updated : Jan 27, 2021, 12:05 PM IST

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலா, நான்கு ஆண்டுகள் தண்டனை நிறைவடைந்து இன்று(ஜன.27) விடுதலையானார்.

முன்னதாக, சிறை நடைமுறைப்படி, சிறைக் கண்காணிப்பாளர்கள் குழுவும், இரண்டு அலுவலர்களும், கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு விடுதலை புத்தகத்தில்(ஆவணப் புத்தகம்) கையெழுத்து பெற்றனர். தொடர்ந்து, அவரது உடமைகளை தனி வாகனத்தில் சிறையிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு வந்து, சசிகலாவின் உறவினரிடம் ஒப்படைத்தனர்.

சசிகலா விடுதலையை முன்னிட்டு, அவர் சிகிச்சைப் பெற்றுவரும் மருத்துவமனை வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சசிகலாவை வரவேற்க பெங்களூரு மருத்துவமனை முன்பு காத்திருந்த அவரது ஆதரவாளர்கள், இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

மருத்துவமனையில் குவிந்த சசிகலா ஆதரவாளர்கள்

அவரது ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "கரோனாவை வென்றெடுத்த சின்னம்மாவால், எடப்பாடி, ஓபிஎஸ் இருவரையும் வென்றெடுக்க சில நிமிடங்கள் போதும்" எனத் தெரிவித்தார்.

விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. சசிகலா விடுதலையானாலும், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் தான் இருப்பார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் நெருங்கிய நண்பர் இளவரசி, உறவினர் சுதாகர் ஆகியோர் பிப்ரவரி 7 ஆம் தேதி விடுவிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 27, 2021, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.