ETV Bharat / state

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டது - தொமுச தலைவர் சண்முகம் - tamilnadu latest news

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டது என தொமுச தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டது

author img

By

Published : Feb 27, 2021, 7:03 PM IST

14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியு உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களது போராட்டம் இன்று (பிப்.27) மூன்றாவது நாளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதற்கு பிறகு தொமுச தலைவர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மூன்று நாள்களாக தொடர்ந்து நடந்து வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் திரும்பப் பெறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளதால் போராட்டத்தை திரும்பப் பெறுகிறோம். அதேபோல் ஸ்டாலின் உள்பட சில அரசியல் கட்சித் தலைவர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்திருப்பதால் போராடுவது நியாயம் கிடைக்காது எனத் தெரிவித்தனர்" என்றார்.

இதையும் படிங்க: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.