சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வுசெய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு (22) என்பவர் தனது 15 வயது மகளை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிறுமியைத் துன்புறுத்தியதாக செரினா வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்படி விசாரணை செய்து காவல் துறையினர் எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், எனப் பலர் உள்பட 21 நபர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் சிறுமியைப் பாலியல் வன்புணர்வுசெய்த வழக்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுமான பொறியாளராகப் பணிபுரியும் கண்ணன் (53) என்பவரையும் காவல் துறையினர் இன்று கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும்!