ETV Bharat / state

’விதிகளை மீறும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ - அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை அமைச்சர்

விதிகளை மீறும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

’விதிகளை மீறும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ -  அனிதா ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Apr 28, 2022, 6:59 AM IST

சென்னை: தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் பதிவு செய்யாமல் இயங்கும் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, இறால் பண்ணைகளால், தனிநபர் வருமானம் மட்டுமே ஏற்படுகிறது என்றும், இப்பண்னைகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, கிராமப்புறத்தில் விவசாயம் அழியக்கூடிய நிலை ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும், சட்ட விதிகளுக்குப் புறம்பாக, அனுமதி இல்லாமல் செயல்படும் இறால் பண்ணைகள் குறித்து விசாரிக்க, அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவலர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இறால் பண்னைகளை நேரில் ஆய்வு செய்து, விதிகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஆந்திரா மாநிலத்தில் மீன்வளத்துறை முதலிடத்தில் உள்ளதாகவும், அங்கு இறால் பண்னைகளும், விவசாயமும் பாதிப்பு இல்லாமல் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். இறால் பண்ணைகளால் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றும், தமிழ்நாட்டையும் மீன்வளத் துறையில் முதன்மை மாநிலமாக வருங்காலத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் விவசாயிகளுக்கும், நீர் வளத்திற்கு பாதிப்பு ஏற்படாத இடங்களில் இறால் பண்ணைகள் அமைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்த பரிதாபம்.. தஞ்சை தேர் விபத்தின் கோரம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.