ETV Bharat / state

ஈரோடு இடைத்தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு:யாருக்கு சாதகம்..? - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பது யாருக்கு சாதகம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்தான ஒரு செய்தித் தொகுப்பை காணலாம்.

ஈரோடு இடைத்தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு:யாருக்கு சாதகம்..?

author img

By

Published : Feb 28, 2023, 5:51 PM IST

Updated : Mar 7, 2023, 10:22 AM IST

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசுவும், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகாவும், தேமுதிக சார்பாக ஆனந்த்தும் என நான்கு முனைப்போட்டி நிலவியது.

திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., திருமாவளவன் எம்.பி., அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோரும் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அங்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுகவின் 21 மாதம் ஆட்சியின் மதிப்பீடாகவும், அதிமுகவிற்கு தலைமையை நிரூபிக்க வேண்டிய தேர்தலாகவும் இரண்டு தரப்பும் வெற்றி பெறும் முனைப்புடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் தெளிவுடன் செயல்பட்ட திமுக, அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது முதல் அதிவேகம் எடுக்க ஆரம்பித்தது.

இதில், திமுகவினர் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு, டம்ளர், குக்கர் போன்ற பரிசுப் பொருட்களும், சாமியானா பந்தல் அமைத்து வாக்காளர்களை காலை முதல் மாலை வரை அடைத்து வைத்து, பண விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுகவினரும் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஈரோடு கிழக்கில் அனுமதியின்றி செயல்பட்டதாக 14 சாமியானா பந்தல்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூலம் மூடப்பட்டது.

மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ரத்து செய்யும் அளவிற்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. திமுக தனது 21 மாதங்கள் ஆட்சியில் செய்த செயல்பாடுகளையும், அதிமுக தங்கள் ஆட்சியில் செய்த செயல்பாடுகள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றாத வாக்குறுதிகளையும் பிரசாரத்தில் முன்வைத்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 பூத்துகள் உள்ளன. இதில் மொத்தமாக 75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை திமுக ஆளுங்கட்சியாக இருந்தது. 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மொத்தம் 59 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது மிகவும் குறைவான வாக்குப்பதிவாகும். அப்போது இருந்த ஆளுங்கட்சி மீது அதிகப்படியான அதிருப்தி காரணமாகவே வாக்கு சதவீதம் குறைந்ததாக பேசப்பட்டது. இதனால் எதிர்க்கட்சியான அதிமுக அந்த தேர்தலில் அமோக வெற்றிபெற்றது.

2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை ஆளுங்கட்சியாக அதிமுக இருந்தது. 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 70.22 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் 70.22 சதவீதம் வாக்குப்பதிவானதால் எதிர்க்கட்சியான திமுக, குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேபோன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 75 சதவீதம் வாக்குப்பதிவு அடிப்படையில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றிபெறும் எனக் கூறப்படுகிறது.

75 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், "கடந்த காலங்களில் வாக்கு சதவீதம் அடிப்படையில் யாருக்கு அதிக வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்று பார்க்கும் போது, வாக்கு சதவீதம் அதிகமாகப் பதிவாகினால் அது ஆளும் கட்சிக்கு சாதகமாகவும், வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகினால் அது எதிர்க்கட்சிக்கு சாதகமாவும் இருக்கும். அதன் அடிப்படையில் பார்க்கும்போது ஆளும் கட்சியான திமுகவின் தேர்தல் பணிகளுக்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அப்படி 85 சதவீதம் பதிவாகிருந்தால் ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கும். ஆனால், 75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதால் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும். இதற்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக இவ்வளவு அமைச்சர்களை வைத்து தேர்தல் பணிகள் செய்திருக்க வேண்டியது இல்லை.

திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் இடைத்தேர்தலை கெளரவ பிரச்னையாக எடுத்துக்கொண்டனர். 75 சதவீதம் வாக்குப்பதிவு என்பது திமுக கூட்டணிக்கே சாதகமாக அமையும். ஆனால், காங்கிரஸ் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து!

Last Updated : Mar 7, 2023, 10:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.