ETV Bharat / state

சென்னை விமான நிலைய ஊழியர்கள் ஏழு பேருக்கு கரோனா - சென்னை விமானநிலைய பாதுகாப்பு பணி அலுவலர்கள்

சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை நிா்வாக அலுவலகத்தில் ஏழு வீரா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவா்கள் பணியாற்றிய அறைகள் சீல் வைக்கப்பட்டன.

Seven cisf personals had corona infection in chennai

author img

By

Published : Jun 20, 2020, 12:59 PM IST

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் (CISF) நிா்வாக அலுவலகம் சென்னை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது. அங்கு பணியிலிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் ஏழு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவா்கள் ஏழு பேரும் உடனடியாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அவா்களோடு பணியிலிருந்த 15 போ் தனிமைப்படுத்தப்பட்டு அவா்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் பணியாற்றிய அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

பின்னர், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி விமான நிலைய சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.