ETV Bharat / state

தொடர் கொள்ளையர்கள் கைது - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் - Crime news

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat தொடர் கொள்ளையர்கள் கைது
Etv Bharat தொடர் கொள்ளையர்கள் கைது
author img

By

Published : Aug 22, 2022, 6:49 AM IST

சென்னை: அசோக் நகரில் கடந்த 7, 15 ஆகிய இரண்டு நாள்களில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் மற்றும் 15 சவரன் என மொத்தம் 45 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அசோக் நகர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து 2 வாரங்களாக கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று (ஆக.20) பெரும்பாக்கத்தில் பதுங்கியிருந்த பியான் வெங்கடேசன் என்பவரையும் அவருடைய உறவினர் சிவக்குமார் என்பவரையும் அசோக் நகர் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் தெரியவந்தது.

பியான் வெங்கடேசனின் சொந்த ஊர் திருவாரூர். இவர் திருவாரூரில், மறைந்த பிரபல கொள்ளையன், முருகனின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஈரோடு, சேலம், திருச்சி, திருவாரூர், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் பியான் வெங்கடேசன் மீது நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

ரயில்வே நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் ஒட்டியுள்ள வீடுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் அற்ற குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் அங்கு பூட்டியிருக்கிற வீடுகளை மட்டும் குறி வைத்து, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது தான் இவருடைய வழக்கம்.

மேலும் பூட்டப்பட்ட வீட்டை கொள்ளையடிக்கும் போது, அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் சுதாரிப்பதற்கு முன்பாகவே அவர்களுடைய வீடுகளை பூட்டி விடுவது தான் வெங்கடேசனுடைய ஸ்டைல் என்கிறனர் காவல் துறையினர். இவர்கள் செல்போன் எதுவும் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் பயன்படுத்தினால் காவல் துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என கூறுகின்றனர்..

மேலும், கொள்ளையடிக்கும்போது பிடிபட்டால், எளிதில் தப்புவதற்காக உடம்பில் முழுவதுமாக எண்ணெய் தேய்த்துக் கொண்டு வருவதாகவும் காவல் துறை விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. பெரும்பாலான நேரங்களில் கொள்ளையன் வெங்கடேசன் கொள்ளையடிக்கும்போது கால் சட்டை மட்டும் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: கோவையில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்... ஒருவர் கைது...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.