ETV Bharat / state

செப்.29 இல் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை - தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

september-29-tn-cm-interacts-with-medical-experts

author img

By

Published : Sep 24, 2020, 4:14 PM IST

Updated : Sep 24, 2020, 7:07 PM IST

16:12 September 24

கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கத்தில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல தளர்வுகளுடன் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 29ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் பயணிகள் ரயில்கள் இயக்குவது, அண்டை மாநிலத்திற்கு பேருந்து சேவையை அனுமதிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது.  

மேலும் தற்போது 10, 11, 12ஆம் வகுப்புகள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள நிலையில், அனைத்து வகுப்புகளும் தொடங்கப்படுவது குறித்தும், மாநிலத்தில் கல்லூரிகளை திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. எட்டாம் கட்ட ஊரடங்கில், திரையரங்குகள் திறப்பு குறித்தும், அத்தியாவசிய கடைகள் திறப்பதற்கான நேரத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.  

முன்னதாக, நேற்று கரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் சிறப்பான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக பாராட்டினார்.  மேலும் தமிழ்நாட்டிற்கு உடனடியாக ரூ.1000 கோடி தர வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: "கேப்டன் சூப்பர் கவலை கொள்ள வேண்டாம்" பிரேமலதா விஜயகாந்த் தகவல்!

Last Updated : Sep 24, 2020, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.